அன்பு : ஒரு கொண்டாட்டம்

அன்பு நாவலை வாசகர்கள் கொண்டாடுவதைப் பார்த்து விட்டு அடிக்கடி இப்படி சிறிய நாவல்களை எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. வாசகர்களின் கொண்டாட்டம் ஏன் என்று புரிகிறது. ஒவ்வொரு சம்பவத்தோடும் ஒவ்வொரு ஆளோடும் வாசகர் அல்லது வாசகி தன்னைப் பொருத்திப் பார்க்கிறார். அவருக்கு அப்படி எப்போதோ நடந்திருக்கிறது. அல்லது, அவரே அப்படி ஏதாவது செய்திருக்கிறார்.

என் நண்பர் ஒருவர் நாவலைப் பாதி படித்துக் கொண்டிருக்கும்போதே எனக்கு “ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்” மொமெண்ட் என்று எழுதியிருந்தார். இதுவரை நான் எழுதிய நாவல்களிலேயே இதுதான் அதீதமான ரோலர் கோஸ்டர் என்று உணர்கிறேன்.

ஆன்லைனில் வாங்க:

https://tinyurl.com/yhvc8ush