நண்பர் ஸ்ரீராமை அழைக்க வேண்டியிருந்தது. ஆனால் பெயர் மறந்து விட்டது. மூன்றெழுத்துப் பெயராயிற்றே? ராம்ஜி… இல்லை… ஸ்ரீயில் ஆரம்பிக்கும். ஸ்ரீதர்… ஆ, அவர் நம் ஆடிட்டர் ஆயிற்றே? ஸ்ரீ… சே, அவள் பெண். ஸ்ரீயில்தான் ஆரம்பிக்கும். மூன்று எழுத்துப் பெயர். நல்ல அழகிய திருமுகம். பெயர் எப்படி மறந்தேன்? அவர் பெயரை மறப்பது என் பெயரை மறப்பது போல. இப்படி பெயர் மறந்து போனதற்குக் காரணம், ஒரு வார காலமாக ஒரு அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருந்தேன். ஒருவகையான trance மனநிலை. அப்புறமாக ஞாபகம் வந்து விட்டது.
நாவலின் ஒருசில அத்தியாயங்களை மட்டும் ஸ்ரீராமுக்கும் ஸ்ரீக்கும் அனுப்பி வைப்பது வழக்கம். பத்து நிமிடத்தில் பதில் கிடைத்து விடும். இன்றும் அப்படி அந்த அத்தியாயத்தை அனுப்பி வைத்தேன். மிகச் சிறிய அத்தியாயம். ஒரு வாரம் எடுத்துக் கொண்டது. காளியின் நர்த்தனம் மாதிரி எழுதியது. வெறியின் உச்சம். எனக்கே கொஞ்சம் பரவசமாக இருந்தது. இருவரிடமிருந்தும் பதில் இல்லை. அரை மணி நேரம் கழித்தே ஸ்ரீராம் அழைத்தார். பிறகு கொஞ்ச நேரத்தில் ஸ்ரீயிடமிருந்து மெஸேஜ் வந்தது. இருவருமே அந்த அத்தியாயத்தைத் திரும்பத் திரும்பப் படித்தார்களாம்.
ஸ்ரீயின் மெஸேஜை கீழே தருகிறேன்.
Breathtaking charu… fantastic .. They say, “That’s the thing about books. The books let you travel without moving your feet.” After reading this chapter, I really don’t know where I am… Just vanished into thin air. Reading repeatedly since it is giving me insatiable pleasure. Something mystical your words are charu.
Shree