உறவு — பொய்களின்
முகமூடி
அண்டை வீட்டார் — கண்ணில் புழுதி தூவும் நிழல்கள்
குழந்தைகள் — அறியாமையின் துளிர்கள்
செல்லப் பிராணி — அபத்தத்தின் குறியீடு
தெருப்பிராணிகள் — அவலத்தின் அடையாளம்
பிச்சைக்காரர் — சமூகத்தின் சீழ்
ஏழை — விதியின் பொம்மை
உழைப்பாளி — எந்திரங்களின் அடிமை
ஆசிரியர் — பிளாஸ்டிக் குவளைகளை உருவாக்குபவர்
ரவுடி — கத்தியில் கட்டப்பட்ட மனிதத்தின் எச்சம்
ஞானி — மௌனத்தின் புதிர்
தீர்க்கதரிசி — கனவுகளின் விற்பனையாளன்
கடல் — எல்லையற்ற வெறுமையின் கண்ணாடி
காலை நடை— உடலின் அர்த்தமற்ற கோரிக்கை
சக எழுத்தாளர் — வார்த்தைகளில் மூழ்கி மறந்தவர்கள்
மொக்கை போடுபவர் — உடம்பில் ஏறிய கரப்பான் பூச்சி
உண்மை, சத்தியம், அறம் — பொய்களால் நெய்யப்பட்ட சல்லாத் துணி
இளைஞர் — கனவுகளின் பின்னால் ஓடும் பைத்தியங்கள்
முதியவர் — நினைவுகளில் மூழ்கிய மறதியின் சாட்சியம்
மணவாழ்க்கை — சங்கிலிகளால் பூட்டப்பட்ட தனிமையின் பெருமூச்சு
மணவாழ்க்கையை வெறுப்பவர் — சுதந்திரத்தின் மற்றொரு முகமூடி
கடவுள் — அச்சத்தின் கண்ணாடியில் படிந்த பொய்
கடவுளை நம்புபவர் — நம்பிக்கையில் தொலைந்தவர்கள்
நம்பாதவர் — வெறுமையில் தத்தளிப்பவர்
கோவில், குளம் — கற்களால் கட்டப்பட்ட பொய்மைகள்
மழை — நரகத்திலிருந்து அனுப்பப்பட்ட நீராயுதம்
வெயில் — நரகத்திலிருந்து அனுப்பப்பட்ட தீக்கணை
கவிதை— பொய்களின் நடனம்
காவியம் — அபீன்
எழுத்து — கரமைதுனம் தரும் வெறுமை
ஆடை — இதை விட Anal plugஐ செருகிக்கொண்டு அலையலாம்
தனிமை – அவளின் நிழல்
தத்துவவாதி – கழைக்கூத்தாடியின் வேடத்தில் வரும் ஜேப்படித் திருடன்