கன்னடத்துக்காரர்களின் தமிழுக்கு
நான் அடிமை
ஒரு கடைக்காரர் சொன்னார்
‘இந்த சாமாங்கோ ரொம்ப நல்லாருக்காங்கோ…’
ஜக்கிக்கு லட்சக்கணக்கில் சீடர் உண்டு
எனக்கு அவரை
வேறொரு காரணமாய்ப் பிடிக்கும்
அவர் பேசும் தமிழ்
’ஒரு மரத்திலே ஒரு கொரங்கு
இருந்தாங்கோ…’
ஆஹா, அதைக் கேட்டால்
இன்பத் தேன் வந்து பாயும்
என் காதினிலே
ஒரு புத்தக விழாவிலே
ரஜினி பேசினார்
’தமிழ்நாட்டின் அடியாளா ஆனந்த விகடன் இருக்காங்கோ…’
ஐயோ, விகடன் நண்பர்கள்
கோவித்துக் கொள்வார்களே?
திரும்பவும் கேட்டேன்
திரும்பவும் அதே அடியாள்
நண்பரை அழைத்துக் கேட்டேன்
‘அது அடியாள் இல்லை, அடியாளம்…’
நேற்று என் தோழி அழைத்தாள்
கன்னடத்துப் பைங்கிளி
‘எங்க தெருக்கோடியிலே
ரெண்டு நாய்ங்கொ இருந்தாங்கோ…’
‘ஆமாம்…’
‘அதுலே ஒரு நாய்ங்கொ நேத்திலேந்து
காணாமப் போய்ட்டாங்கோ…’