இழிவின் முகங்கள்

இது ஒரு ஃபிலிஸ்டைன் சமூகம் என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். ஒரு சமூகத்தின் இழிநிலை அதன் அடிப்பகுதியிலிருந்து தொடங்குவதில்லை. தலையிலிருந்துதான் தொடங்குகிறது. தலையே நாறுகிறது என்றால் பாதம் நாறுவதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்?

இந்த சமூகம் நம்ப முடியாத அளவுக்கு சீழ்பிடித்துக் கிடக்கிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம், இங்கே உள்ள மேட்டுக்குடியினர், இங்கே உள்ள எலீட் சமூகத்தினர், இங்கே உள்ள அறிவுஜீவிகள், பேராசிரியர்கள் போன்றோர்தான். ஆங்கிலம் தெரிந்த லும்பன் கூட்டம்.

எனக்கு இன்று ஒரு மின்னஞ்சல் வந்தது. ஆங்கிலத்தில். வழக்கம்போல் யாருக்கு எழுதுகிறோமோ அவரை விளிக்காமல் ஒரு கடிதம். நூறு முறை எழுதி விட்டேன். சமீபத்தில்கூட ஒரு நண்பருக்கு ஏழெட்டு வாக்கியங்களில் ஒரு கடிதம் எழுதினேன். பதில் வந்தது, ஓகே. மின்னஞ்சலிலேயே இப்படி. இது ஒருவரை மிக மோசமாக அவமானப்படுத்தும் செயலாகும் என்று அந்த நண்பரிடம் பதினைந்து ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன். ஆண் என்றால் ஒதுக்கித் தள்ளி விடுவேன். வழக்கம் போல் பெண். வழக்கம் போல் அவரும் ஓகே என்று அனுப்பியிருந்தார். என்ன சொல்கிறேன் என்றால், ஓகே சாரு என்று எழுத நேரமிருந்தால் பதில் போடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் பதிலே வேண்டாம். செருப்படி வாங்குவதை விட எந்த பதிலும் இல்லாமல் இருப்பது மேல்.

எனக்கு கீழ்க்காணும் மின்னஞ்சல் எழுதிய பெண்மணிக்கு சுமார் நாற்பத்தைந்து வயது இருக்கலாம். உயர் சாதி, மேட்டுக்குடி இரண்டிலும் எனக்கு சந்தேகம் இல்லை. இத்தனை பெரிய இடத்தில் இருந்தாலும் லும்பன் புத்தி போகவில்லை. கடிதம் மொட்டையாக ஆரம்பித்திருக்கிறது. சார் இல்லை, சாரு இல்லை. எதுவுமே இல்லை. டேய் நாயே என்று என்னை விளித்து வரும் வசை கடிதங்கள் எனக்கு மன உளைச்சல் தருவதில்லை. ஆனால் இப்படி மொட்டையாக எழுதப்படும் கடிதங்கள் மிக மோசமாக என்னை அவமதிக்கின்றன.

மீண்டும் ஆயிரமாவது தடவையாகச் சொல்கிறேன். என்னை சாரு என்றோ, சார் என்றோ விளித்து எழுதுங்கள். டியர் சாரு, டியர் சார் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் எதுவுமே இல்லாமல் ஓகே என்று எழுதினால் எனக்கு ஒரு மயிரும் இல்லை. ஒரு ஆசிரியனை அவமதித்த பாவம் உங்களை வந்து சேரும். அவ்வளவுதான்.

இந்தக் கடிதத்தை எதனோடு ஒப்பிடலாம்? சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் போய் “நான் உங்களோடு படுக்கலாமா?” என்று கேட்டால் செருப்பால் அடிப்பாளா, மாட்டாளா? அப்படித்தான் இருக்கிறது இந்தக் கடிதம். எழுத்தாளன் என்றால் என்ன என்றே தெரியாத மட்டிக் கூட்டம் இப்போது மேட்டுக்குடியிலிருந்து ஆங்கிலத்தில் கடிதம் எழுதுகிறது.

கடிதத்தோடு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இரண்டு சிறுகதைகளும் இருந்தன. இதோ கடிதம்:

I hope this message finds you well.

We are reaching out to ask if you would be willing to write a short story (under 600 words) for our daughter. Rather than a straightforward summary of who she is, we’re hoping for something more heartfelt—something that reveals a deeper layer of her journey that might not be immediately visible to the readers.

To help you get a sense of how we want it, we’ve attached 2 other stories for reference. However, we’d love the opportunity to speak with you directly and share about her. We also speak Tamil, which might make it easier to communicate our thoughts and her story more naturally.

Please let us know if you would be open to this, and we can set up a time to connect.