இனிது இனிது எல்லாம் இனி இனிது

மனையாளிடம் நான்கு நாள்
பரோல் கிடைத்தது
வழக்கமாய்ச் செல்லுமிடம்
கணக்கில் இல்லை
மோகினிக்குட்டி
வேலைப்பளுவில்
என்ன செய்ய
ஏற்காடா
கோவாவா
ஊட்டியா
அவளிடமே கேட்டேன்
’லூசா நீ
இங்கே வா’

’ஐயோ
நீ பிஸியாச்சே’

’அது கிடக்கட்டும்
எனக்கும் ஒரு
ப்ரேக் வேண்டாமா
எப்போது வருகிறாய்’

இப்போது
ஊண் ருசிக்கிறது
உறக்கம் இனிக்கிறது
எந்நேரமும் அழையுங்கள்
சத்தியமாய் பேசுவேன்

இனியெனக்கு
இவ்வுலகம் இனியது
வானம் இனிமையுடைத்து
காற்று இனிது
தீ இனிது
நீர் இனிது
நிலம் இனிது
நீ இனிது
நான் இனிது
அவள் இனிது
இனிது
இன்று
இனிது
எல்லாமே இனி
இனிது