இதை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை.
காமரூப கதைகள் என்ற என் நாவல் பற்றி ஏன் யாரும் பெரிதாகப் பேசவில்லை என்பது எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. அதில் மனுஷ்ய புத்திரன் நான்கு பெயர்களில் வெவ்வேறு பாத்திரங்களாக வருகிறார். மனோஜும் கூட. பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டன. நாங்கள் மூவரும் சேர்ந்து அடிக்காத லூட்டி இல்லை. குறிப்பாக நானும் மனோஜும். காமரூப கதைகள் நாவலில் வசந்த் குஞ்ஜ் என்று ஒரு அத்தியாயம் வரும். அதை யாராலும் மறக்க முடியாது. படு பயங்கரமான நகைச்சுவை ததும்பம் அத்தியாயம்.
இது எல்லாம் எனக்கு மொழி என்ற கட்டுரைத் தொகுப்பை செப்பனிட்டுக்கொண்டிருக்கும்போது ஞாபகம் வந்தது. ஏதோ ஒரு நாவலின் அத்தியாயங்கள் போல் இருந்தன ஒவ்வொரு கட்டுரையும்.
மனுஷ்ய புத்திரனை அழைத்தேன். ஃபோனை எடுக்கவில்லை. மனோஜை அழைத்தேன். நாளை வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
நாஸ்டால்ஜியா ஒரு வலி. அந்த ஏரியாவுக்குள் நான் செல்வதே இல்லை. இருந்தாலும் இப்படி ஒரு புத்தகத்தில் நுழையும் போது அதைத் தவிர்க்க முடியவில்லை.