வேற்றுக்கிரகவாசியின் டயரிக் குறிப்புகள் என்ற பத்தி இன்றிலிருந்து புதிய தலைமுறை இதழில் துவங்கியுள்ளது. நண்பர்கள் வாங்கிப் படியுங்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய தலைமுறை இதழில் பத்தி வெளிவரும்.
tamilkushi.com என்ற ஃபேஸ்புக் தளத்தில் என்னுடைய நேர்காணல் ஒன்று இன்று மதியம் இரண்டு மணிக்கும் பிறகு இரவு பத்து மணிக்கும் வெளியாகிறது. கேளுங்கள்.
இதுவரை நான் பேசிய மேடைப் பேச்சுக்களிலேயே நேற்று பேசியதுதான் ஆகச் சிறந்தது என்பது என் கருத்து. வாசகர் வட்டத்திலிருந்து வந்திருந்த இரண்டு நண்பர்களுக்கும் நன்றி.
நம்முடைய கோபதாபங்களையெல்லாம் விட்டு விட்டுத்தான் இலக்கியத்தை அணுக வேண்டும். என் எழுத்தை மலம் என்று வர்ணித்த சுஜாதாவை நான் பாராட்டிக் கொண்டே இருக்கவில்லையா? அசோகமித்திரனிடம் என் பெயரைச் சொல்லிப் பாருங்கள். மூர்ச்சை அடைந்து விடுவார். அவ்வளவு எரிச்சல் என் எழுத்தின் மீது. அதற்காக அவர் எழுத்தை நான் குறைத்து மதிப்பிட முடியுமா? சும்மா தோன்றியது, சொன்னேன்.
மனுஷ்ய புத்திரனின் அந்நிய நிலத்தின் பெண் – நான் கவிஞனாக இருந்திருந்தால் எழுதியிருக்கக் கூடிய ஒரு நூல். தமிழின் ஆகச் சிறந்த கவிதை நூல் என்று இதைத்தான் சொல்லுவேன். அடுத்த மாதம் இது பற்றி விரிவாக எழுதுவேன்…