வழக்கமாக இந்த நேரத்தில் நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைப் பயிற்சி முடித்து விட்டு மஹாமுத்ராவில் காஃபி குடித்துக் கொண்டிருப்பேன். அல்லது, அதையும் முடித்து விட்டு பாபா கோவிலின் வெளியே நின்று கொண்டிருப்பேன். தேகத்தில் வியர்வை ஆறாய்ப் பெருகி ஊற்றிக் கொண்டிருக்கும் என்பதால் மற்றவர்களுக்குத் தொந்தரவாக உள்ளே செல்வதில்லை. நேற்று இரவு ஒரு சம்பவம் நடந்தது. தினமணி தொடருக்கு எழுதுவதற்காக ஒரு தமிழ் நாவலைப் படிக்க எடுத்தேன். முடித்த போது வெள்ளி முளைத்து விட்டது. இப்படிப் படித்து பல காலம் ஆகிறது. ராணுவ ஒழுங்குடன் இரவு பத்தரைக்கெல்லாம் உறங்கச் சென்று விடுவேன். நேற்று அது நடக்கவில்லை. என் உடல்நலனுக்கு இது ஆகாது. ஆனாலும் ஒருநாள் இறைசக்தியிடம் பாரத்தைப் போட்டு விட்டு வாசித்தேன். இடையில் புத்தகத்தை வைக்க முடியவில்லை. 1952-இல் வெளிவந்த நாவல்.
விஷயத்துக்கு வருகிறேன். ஒரு நண்பர் விமானச் செலவை ஏற்றுக் கொண்டிருப்பதால் மே மாதத் துவக்கத்தில் ஒரு வார காலம் ஐரோப்பா செல்கிறேன். தங்குதல், ஊர் சுற்றல், உணவு போன்ற செலவுகள் தான் அதிகம். விமானக் கட்டணம் குறைவுதான். எனவே மீண்டும் உண்டியல் குலுக்குகிறேன். முடிந்தவர்கள் என் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கலாம். முடியாதவர்கள் இதைப் பொருட்படுத்த வேண்டாம். தூற்ற நினைப்பவர்கள் அந்த வேலையை இனிதே செய்யலாம். என் மகிழ்ச்சிக்காக எதையுமே நான் செய்வதில்லை. எல்லாமே என் எழுத்துக்கான கச்சாப் பொருள்தான். சிறிது உணர்ச்சிவசப்பட்டதால் தினமணி தொடர் பற்றிய எதிர்வினைகளுக்குச் சற்று காரமாக பதில் எழுதி விட்டேன். யோசிக்கும் போது நான் எழுதியது என்னுடைய முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது. இன்னும் நான் சமநிலை அடைய வேண்டும். எழுத்து எனக்கு தவம். அதைப் புரிந்து கொண்ட சில நல்ல ஆத்மாக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்களுக்காகவே இன்னும் எழுத வேண்டும், இன்னும் எழுத வேண்டும் என்ற வெறி பிறக்கிறது. அப்படி ஒரு நண்பரின் கடிதம் இது:
என் வங்கிக் கணக்கு விபரங்கள்:
Account holder’s Name: K. ARIVAZHAGAN
Axis Bank Account number: 911010057338057
Branch: Radhakrishnan Salai, Mylapore
IFSC UTIB0000006
MICR CODE: 600211002
***
ICICI A/c No. 602601 505045
Branch: T. Nagar, Chennai
A/c holder’s Name: K. ARIVAZHAGAN
IFSC code ICIC0006026
MICR Code: 600229010
Comments are closed.