பழுப்பு நிறப் பக்கங்களில் இந்த வாரம் ந. சிதம்பர சுப்ரமணியன் பற்றி எழுதியிருக்கிறேன். இதுவரை எழுதியுள்ள ஆறு கட்டுரைகளில் இதைத்தான் மிகச் சிறந்தது என்று சொல்வேன். காரணம், ந. சிதம்பர சுப்ரமணியன் எழுதிய இதய நாதம், மண்ணில் தெரியுது வானம் ஆகிய இரண்டு நாவல்களும் என்னை ஒரு காந்தியவாதியாகவே மாற்றி விட்டன. இனிமேல் ஏதாவது கூட்டங்களில் என் மீது வன்முறையைப் பிரயோகம் செய்து என்னைப் பேச விடாமல் செய்தால் செருப்பால் அடிப்பேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். எனக்குப் பதிலாக நீங்கள் வந்து பேசுங்கள் ஐயா என்று சொல்லி விட்டு எழுந்து விடுவேன். கிட்டத்தட்ட என்னை மதமாற்றம் செய்த புத்தகங்கள் என்று இந்த இரண்டு நாவல்களையும் பற்றிச் சொல்வேன்.
Comments are closed.