இந்த வார கல்கியில் என்னுடைய ஒரு கலாட்டா பேட்டி வந்துள்ளது. பார்க்கவும்.
பழுப்பு நிறப் பக்கங்கள் – அசோகமித்திரன் (1) & (2). கூடவே பழுப்பு நிறப் பக்கங்களுக்கு வரும் ஆபாசப் பின்னூட்டங்களையும் நீங்கள் படித்து மகிழலாம்.
நாகூர் ரூமிக்கு மட்டும் ஒரே ஒரு சிறிய விளக்கம். நான் ஒருவரை ஆகா ஓகோ என்று பாராட்டுவதாகவும் பிறகு அவரைக் கீழே தள்ளி விடுவதாகவும் எழுதியிருக்கிறார். என்னுடைய 15 வயதிலிருந்து நான் இலக்கிய வாசகன். அந்த வயதிலிருந்தே என்னை அறிந்தவர் நாகூர் ரூமி. நகுலன், அசோகமித்திரன், சா. கந்தசாமி, ந. முத்துசாமி, லா.ச.ரா., கரிச்சான் குஞ்சு, வண்ண நிலவன், தி.ஜ.ர., தஞ்சை பிரகாஷ், எம். வி. வெங்கட்ராம், க.நா.சு., கு.ப.ரா. என்று அத்தனை பேரையும் பற்றிய என் கருத்தில் 45 ஆண்டுகளாக எந்த வித முரண்பாடும் இருந்ததில்லை. எந்தக் காலத்திலும் அவர்களின் இலக்கியப் பங்களிப்பை நான் மறுத்ததில்லை. மட்டுமல்ல; அவர்களை எந்தக் காலத்திலுமே எனது ஆசான்களாகத்தான் மதித்து வருகிறேன். அதோடு, என் 25ஆவது வயதிலும் காஃப்காவும், ஆல்பர் கம்யுவும், சுந்தர ராமசாமியும், புதுமைப் பித்தனும் எனக்கு உவக்கவில்லை. இப்போதும் உவக்கவில்லை. மற்றபடி சாமியார்களைப் பற்றிய என் கருத்துதான் அவ்வப்போது மாறி வருகிறது. நாகூர் ரூமி தயவுசெய்து சாமியார்களை மறந்து விட்டு இலக்கியவாதிகளைப் பற்றி மட்டுமே கவனம் செலுத்தும்படிக் கேட்டுக் கொல்கிறேன்.
மற்றபடி என்னை ஆபாசமாகத் திட்டியிருப்பவர்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. இணைய ரவுடிகளைக் கண்காணிக்க இங்கே எந்த வசதியும் இல்லை. நான் அடுத்த கட்டுரைக்காகப் படித்துக் கொண்டிருக்கிறேன்…
அசோகமித்திரன் (2)
Comments are closed.