புதிய எக்ஸைல் வெளியீட்டு விழா காணொளி

டியர் சாரு…

மிக மிக மிக மிக தாமதமான பணி இது. முதல் விஷயம் வேலையும் கொஞ்சம் டைட். இரண்டாவது விஷயம் , வேகம் குறைவான datacard இண்டெர்நெட் கனெக்‌ஷன். file size அதிகம் என்பதால் upload ஆக மணிக்கணக்கில் எடுத்துக்கொண்டது. சில நேரங்களில் hang ஆகி அப்படியே நின்றும் விட்டது. செல்வா  அலுவலகத்தில்  முயற்சித்தும் பயன் இல்லை. நேற்றுதான் அதிவிரைவு ப்ராட்பேண்ட் கனெக்‌ஷன் புதியதாக எடுத்தேன்.  இன்று அப்லோட் செய்து விட்டேன்.

இரண்டு மாத தாமதத்திற்கான வருத்தங்களுடன்,

கணேசன் அன்பு.

part 1 : https://www.youtube.com/watch?v=cHLXpXqTqek ( வரவேற்புரை )

part 2 :  https://www.youtube.com/watch?v=DVfpV3larHk  ( தருண் குறித்து சாருவின் அறிமுகம் )

part 3 : https://www.youtube.com/watch?v=8qULdkohT3E  ( நெல்சன் சேவியர் )

part 4 :  https://www.youtube.com/watch?v=BpPn-QmGi8A  ( தருண் தேஜ்பால் )

part 5 :  https://www.youtube.com/watch?v=e-IVXuCn37k   ( சாருவின் உரை )

ஏப்ரல் 5-ஆம் தேதி கணேஷ் அன்பு மேற்கண்ட விடியோ இணைப்புகளை அனுப்பினார்.  கணேஷ் தான் விடியோ பொறுப்பை ஏற்றார். இதை எடிட் செய்வதற்காகவும் இன்னும் அது சம்பந்தமான பணிகளிலும் அவரும் அவரது நண்பர்களும் பல நாட்களை, பல மணி நேரங்களை செலவு செய்திருக்கின்றனர்.  அவர்களுக்கு என் நன்றி என்று சொல்வது என்னவோ போல் உள்ளது.  கிராமங்களில் அந்தக் காலத்தில் சொல்வார்கள், என் தோலை அவனுக்கு செருப்பாய்த் தைத்துப் போட வேண்டும் என்று.  அது போல் என் வாசகர்களிடமும், எனக்கு ஏராளமான உதவி செய்யும் நண்பர்களிடமும் அப்படித்தான் எனக்கும் சொல்லத் தோன்றுகிறது.  என் தோல் மட்டும் அல்ல; என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் எழுத்தாக மாற்றி உங்களுக்கு அளித்துக் கொண்டிருக்கிறேன்.  ஒரு மாதத்துக்கும் மேலாக இதைப் பதிவேற்றும் வேலைக்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை.  இப்போது கூட காலையில் நடைப் பயிற்சிக்குக் காலில் ஷூவை மாட்டிக் கொண்டு இதைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்.  ராகவனிடமிருந்து போன் வந்து கொண்டே இருக்கிறது.  இருந்தாலும் இந்த வேலை ஒரு மாதத்துக்கும் மேலாகக் காத்துக் கிடக்கிறது.  நிகழ்ச்சிக்கு வர முடியாதவர்கள் இந்தக் காணொளிகளைக் காணுங்கள்.  கணேஷ் அன்புவுக்கு மீண்டும் என் அன்பு.

Comments are closed.