பழுப்பு நிறப் பக்கங்கள் : ஆ. மாதவன்

எப்படியான சூழலில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை பழுப்பு நிறப் பக்கங்களுக்கு வரும் பின்னூட்டங்களிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம்.  மற்ற நாடுகளில் எழுத்தாளனை சிறையில் அடைப்பார்கள்.  நாடு கடத்துவார்கள்.  அல்லது சுட்டுக் கொல்வார்கள்.  தமிழ்நாட்டில் தொடர்ந்து செருப்பால் அடித்துக் கொண்டே இருப்பார்கள்.  அதுவும் எல்லா எழுத்தாளர்களையும் அல்ல;  என்னை மட்டும்தான்.  ஸீரோ டிகிரி ஆங்கிலப் பதிப்புக்கு பல்லவி என்பவர் ஒரு மதிப்புரை எழுதிய போது அதற்கு 190 ஆபாச பின்னூட்டங்கள் எழுதியவர்கள் என் தமிழ் நண்பர்கள்.  படு ஆபாசமான வசைகள் அவை.  ஆதாரம்:

https://uglywords.wordpress.com/2012/03/02/on-charu-niveditas-zero-degree-trans-by-pritham-k-chakravarthy-rakesh-khanna/

இது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.

என் எழுத்தைப் படித்துக் குண்டி எரிகிறது என்றால் ஏன் படித்துத் தொலைகிறார்கள் என்றும் புரியவில்லை.  எனக்கு இந்த செருப்படிகளைத் தாங்க முடியவில்லை;  தொடரை நிறுத்தி விடுகிறேன் என்றால் நண்பர்கள் கோபிக்கிறார்கள்.  அன்னிக்கு நீ ஜெயமோகனைத் திட்டினாய்; இன்னிக்கு ஏன் அவரைப் பாராட்டுகிறாய் என்று ஒரு அறிவுச் சுடர் கேட்கிறது.  வியாசன் கூட திருடனாக இருந்தவன் தான்.  அதற்காக எப்போதுமே திருடனாகத்தான் இருக்க வேண்டுமா?  இந்த மூடர்களிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.  ரொம்ப நல்லவர்கள் போல எழுதுகிறார்கள்.  இவர்களுடைய ஒரே நோக்கம், நான் எழுதுவது குப்பை என்று நிறுவுவது தான்.  அவர்கள் நோக்கத்தில் அவர்கள் என்றுமே வெற்றி அடையப் போவதில்லை.

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/06/21/%E0%AE%86.-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/article2877193.ece