அன்புள்ள சாரு,
தங்கள் தேர்தல் கணிப்பின் ரசிகன் நான். இம்முனற எப்படி இருக்கும்?
ஆவலுடன்
வினோத்
அன்புள்ள வினோத்
ஒவ்வொரு தேர்தலிலும் மிகத் துல்லியமாக முடிவுகளைச் சொல்லி விடும் எனக்கே இந்த முறை விழி பிதுங்குகிறது. சினிமாவில் இடைவேளைக்குப் பிறகு படம் சொதப்புவதைப் போல் அதிமுகவின் கடந்த ஒரு ஆண்டு ஆட்சி மக்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அதிமுகவின் மீது மக்களுக்குக் கடும் வெறுப்பு இல்லை. சென்னை, கடலூர் மட்டும் விதிவிலக்கு. இன்னொரு மிக முக்கியமான, ஆச்சரியமான ஒன்றை கவனித்தேன். மக்கள் இன்னமும் திமுக தலைவர் குடும்பத்தின் மீது அச்சம் கொண்டிருக்கின்றனர். எனவே இந்த முறை எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைக்காது. சீட்டுக்கட்டைக் கலைத்துப் போட்டது போல் மக்கள் பல கட்சிகளுக்கும் ஓட்டுப் போடுவார்கள். ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிகிறது. தமிழ்நாட்டு அரசியலில் பெரும் வெற்றிடம் உள்ளது. அதை நிரப்ப இங்கே ஆட்கள் இல்லை.
சாரு