அழகின் பேருரு…

பஞ்சாபி மொழியிலும் குடி என்றால் போதை தான்.  ஆனால் மது போதை அல்ல.  குடி என்றால் பெண்.  பஞ்சாபியின் மிக அழகான வார்த்தைகளில் ஒன்று, குடி.  உட்தா பஞ்சாப் படத்தில் வரும் இக் குடி என்ற இந்தப் பாடலை இதோடு 500 தடவைகளுக்கு மேல் கேட்டிருப்பேன்.  இந்தப் பாடலை ஆலியா பட்டும் பாடியிருப்பது இப்போதுதான் தெரிந்தது.  இலக்கியத்தில் ஷேக்ஸ்பியர் எப்படியோ அப்படித்தான் ஆலியா பட்.  பேரழகி என்ற வார்த்தையெல்லாம் அவரை அவமானப்படுத்துவது போல.  கடவுள்.  கடவுள்.  அழகின் குறியீடு.  மலையடிவாரத்தின் தென்றல்.  அவர் பாடிய இக் குடி.