செல்வராகவனின் என்.ஜி.கே. பற்றி கடந்த இரண்டு தினங்களாக ஒரே போன் அழைப்புகள். ஒருவர் தன் பிறந்த நாள் அன்று அந்தப் படத்துக்குப் போய் செத்து சுண்ணாம்பாகி வந்திருக்கிறார். ராஜப் பிளவை. எல்லோருமே புதுப்பேட்டை எடுத்த செல்வாவாயிற்றே என்கிறார்கள். அப்படி ஒரு கல்ட் ஃபில்மாகியிருக்கிறது புதுப்பேட்டை. ஆனால் நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருப்பது போலவே தமிழ் இயக்குனர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவே மறுக்கிறார்கள். மேற்கில், ஹாலிவுட்டில் 80 வயதில் 20 வயது இளைஞன் எடுப்பது போல் எடுக்கிறான். மார்ட்டின் ஸ்கார்ஸஸி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்டை எடுத்தபோது அவர் வயது 70. என்ன மாதிரி படம் அது! ஆனால் தமிழ் இயக்குனர்கள் 40 வயதிலேயே ஆட்டம் கண்டு விடுகிறார்கள். அதன் ஒரு சாட்சிதான் செல்வராகவனின் என்.ஜி.கே. கே.ஜி.எஃப் என்று ஒரு கன்னடப் படம் சென்ற ஆண்டு வந்தது. அற்புதமான கமர்ஷியல் படம். மிரள வைக்கும் படம். முதலில் நான் என்.ஜி.கே. அதன் தமிழ் வடிவம் என்றே நினைத்து விட்டேன். என்.ஜி.கே.வில் என்ன பிரச்சினை என்றால், இன்றைய தமிழன் வேண்டுவது, கனவு காண்பது இரண்டு கட்சிகளுக்கும் ஒரு சரியான மாற்று. விஜய்காந்த்தைக் கொண்டு வந்தார்கள். அவர் நான் ஹீரோ அல்ல, காமெடியன் என்று சொல்லி விட்டார். கமல் தானே முயன்றார். மக்கள் அவரை ஏற்கவில்லை. ஆனால் செல்வராகவனோ மக்களின் இந்த நாடித் துடிப்பைப் புரிந்து கொள்ளவே இல்லை. 25 ஆண்டு காலம் சந்திர மண்டலத்தில் வாழ்ந்து விட்டுத் தமிழ்நாட்டுக்கு வந்து திடீரென்று ஒரு படம் எடுத்தால்தான் இப்படிப்பட்ட படம் எடுக்கலாம். பிரச்சினையே புரியவில்லையே, அப்புறம் எப்படி அரசியல் படம் எடுப்பது! சரி, ஒரு கதையை சுவாரசியமாகச் சொல்ல வேண்டாமா? ஒரு விஷயத்தை எத்தனை அலுப்பூட்டும் விதத்தில் சொல்ல முடியுமோ அத்தனை அலுப்பூட்டும் விதத்தில் சொல்லியிருக்கிறார் செல்வராகவன்.
பின்குறிப்பு: எனக்கு நடிப்பில் ஆர்வம் உண்டு. ஆனால் நடிப்புக்குப் பதிலாக கதை, திரைக்கதையில் உதவி செய்ய அழைத்திருந்தால் இதைக் கொஞ்சம் தட்டி ஒட்டித் தேற்றியிருக்கலாம். இன்றைய நிலைமையில் ஒரு அரசியல் படம் தேவைதான். நன்றாக ஓடும். ஆனால் அதை இந்த மாதிரி எடுக்கக் கூடாது. புதுப்பேட்டை மாதிரி எடுக்க வேண்டும்…
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai