ஜென்மா

ஒரு இந்தியத் தாய். அவளுக்கு ஒரு மகன்.  மகனுக்கு ஒரு வயது ஆவதற்குள் கணவன் இறந்து விட்டான்.  வேறு எந்த ஆதரவும் இல்லாமல் மகனைத் தன் ரத்தத்தை வியர்வையாக்கிப் படிக்க வைத்தாள்.   மகன் பெரிய வேலைக்குப் போனான்.  கை நிறைய சம்பாதித்தான்.  அறுபது வயது ஆன அந்தத் தாய்க்கு ஏதோ பென்ஷன் கிடைக்கிறது.  மகன் எதுவும் பணம் அனுப்புவதில்லை.  அவனுக்கு ஏகப்பட்ட கடமைகள்.  அவனுடைய திருமணக் கடன் அடைக்க வேண்டும்.  வீடு வாங்கிய கடனை அடைக்க வேண்டும்.  அந்தப் பெண்மணி எளிமையானவள் என்பதால் பென்ஷன் பணத்திலேயே வாழ்கிறாள்.  மகன் வீடு வாங்கி எல்லா தவணைகளையும் கட்டி விட்டான்.  கடைசி தவணை கட்ட வேண்டும்.  அம்மாவிடம் கேட்டான்.  அவளிடம் கொஞ்சம் நகை இருக்கிறது.  அதை விற்று மகனிடம் கொடுத்தாள்.    ”அவள் என் வாசகி.  நீங்கள் செய்வது நியாயமாகத் தெரியவில்லையே?” என்றேன். 

”சாரு, எனக்கு ஜென்மா தியரியில் நம்பிக்கை உண்டு.  பூர்வ ஜென்மத்தில் அவனுக்கு நான் பட்ட கடனை இப்போது திருப்பிக் கேட்கிறான்.  என்னால் பட்டினி கூட கிடக்க முடியும்.  பட்ட கடனைத் திருப்பாமல் இருக்க முடியாது.  இப்போது பாருங்கள்.  அவன் கேட்டதைக் கொடுத்து விட்டேன்.  இனி என்னால் நிம்மதியாகத் தூங்க முடியும்” என்றாள். 

எனக்கும் ஜென்மாவில் நம்பிக்கை உண்டு.  அதனால்தான் அந்தப் பையனை நினைத்து வருத்தமாக இருக்கிறது. 

***

ராஸ லீலா கலெக்டிபிளுக்குப் பணம் அனுப்பிய இரண்டு நண்பர்கள் அவர்களின் பெயர், புகைப்படம் போன்றவற்றை அனுப்பவில்லை. தயவுசெய்து அவ்விபரங்களை அனுப்பவும். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai