ராஸ லீலா கலெக்டிபிள் பிரதிக்குப் பணம் செலுத்த இன்றே கடைசி நாள் என்று எழுதியிருந்தேன். ஒரு நண்பர் இன்னும் ஒரு வாரம் நீட்டிக்கச் சொல்லி எழுதியதோடு அல்லாமல் பணமும் அனுப்பிப் பதிவு செய்து கொண்டார். இன்று ராஸ லீலா பிழை திருத்தம் முடித்துக் கொடுத்து விட்டேன். இனி ஒவ்வொருவருக்காக டெடிகேஷன் எழுத வேண்டும். அதை இரண்டு நாளில் முடித்து விடுவேன். சீக்கிரம் முடித்து விட்டு பெரூ-பொலிவியா- சீலே பயணத்துக்குக் கொஞ்சம் படிக்க வேண்டும். ஆயிரக் கணக்கான விஷயங்கள் உள்ளன. உதாரணமாக, பெரூவின் எலுமிச்சைப் பழங்களைப் போல் மருத்துவ குணம் கொண்ட எலுமிச்சை உலகில் எங்குமே கிடையாது. பெரூவியர்களின் ஆரோக்கியத்துக்கு அந்த எலுமிச்சை ஒரு அடிப்படையான விஷயம். ஒரு அமெரிக்க அன்பர் பெரூ பற்றி இரண்டாயிரம் பக்கங்களுக்கு அதி சுவாரசியமான விஷயங்களை எழுதியிருக்கிறார். கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக அவர் பெரூ பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறார். உலகச் சுற்றுலாப் பயணிகளின் மெக்கா பெரூ.
சரி, விஷயத்துக்கு வருகிறேன். ராஸ லீலா கலெக்டிபிள். இதன் அடக்க விலை குத்துமதிப்பாக 2000 ரூ. ஆகலாம். கலெக்டிபிள் வாங்கும் ஒவ்வொரு வாசகருக்கும் தனித்தனியே பிரதிகள் தயாரிக்கப்படும் என்பதால் அத்தனை செலவு. ஒரு கலெக்டிபிளின் விலை 10000 ரூ. இதனால் கிடைக்கும் பணத்தை என்னுடைய பயணங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறேன். அடுத்து, ஐரோப்பியப் பயணம். ஃபெப்ருவரியில் ப்ரஸீல். எனவே முடிந்தவர்கள் ராஸ லீலா கலெக்டிபிள் திட்டத்தில் இணையுங்கள். கடைசித் தேதி இன்றோடு முடிந்து விட்டதே என்று எண்ண வேண்டாம். தனித்தனி பிரதி என்பதால் இன்னும் ஒரு பத்து நாள் நீட்டிப்பது சாத்தியம்தான். ஆனால் இருபது தேதிக்கு மேல் இயலாது. நான் பயண ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும். ஒரு சில நண்பர்கள் பணம் அனுப்பி விட்டு தங்கள் பெயர் விபரம் கூடத் தெரிவிக்கவில்லை. இதை கவனியுங்கள். கலெக்டிபிள் திட்டம் பற்றியும் பணம் அனுப்புவது பற்றியும் என் பயணம் பற்றியும் மணிக் கணக்கில் என்னிடம் போனில் பேசியவர்கள் அதற்குப் பிறகு சத்தமே இல்லை. இதுதான் எனக்குப் பிடிக்காது. என் நேரத்தை வீணடிக்காதீர்கள் தயவுசெய்து. முடிந்தால் செய்யுங்கள். இல்லையேல் அமைதியாகப் படித்து இன்புறுங்கள். வெட்டி சவடால் பேச்சுக்களை நம்முடைய கல்லூரி நண்பர்களிடம் பேசலாம். தப்பே இல்லை. 100 புத்தகங்களை எழுதியிருக்கும் ஒரு எழுத்தாளனிடம் பேசலாமே நண்பர்களே?
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai