Pouch

எத்தனையோ பயணங்கள் போய் ஆயிற்று.  இன்னும் ஒரு பௌச் இல்லை.  ஆனால் பெண்கள் இம்மாதிரி விஷயங்களில் ரொம்பக் கெட்டி. நாலைந்து பௌச்கள் வைத்திருக்கிறார்கள்.  ஒன்று, முக அலங்காரத்துக்கு.  ஒன்று, கைபேசி வைத்துக் கொள்ள.  ஒன்று, உடம்பு அலங்காரத்துக்கு.  ஒன்று, பணம், பயணச் சீட்டு எல்லாம் வைத்துக் கொள்ள.   ஒரு பாடாவதி பௌச் இருக்கிறது.  பௌச் என்ற பெயருக்கே அவமானம்.  அதை என்னுடைய மாத்திரைகளை வைத்துக் கொள்ளப் பயன்படுத்துகிறேன்.  அதைப் பார்த்தாலே ஷேவிங் சாதனங்கள் வைத்துக் கொள்ளும் பௌச் என்று தெரியும்.  மாத்திரைகளுக்காக அதை வெளியே எடுத்துப் போகும் போது “என்ன இது, ஷேவிங் சாதனங்களோடு சுற்றுகிறீர்கள்?” என்று காயத்ரியும், ராம்ஜியும் கிண்டல் செய்வதுண்டு.  ஆனால் எனக்கு இந்தக் கூச்ச நாச்சமெல்லாம் கிடையாது என்பதால் அது பற்றிக் கவலைப்படுவதில்லை. 

”66 வயதாயிற்று.  இத்தனை பயணங்கள் சென்று வந்தாயிற்று.  இன்னும் ஒரு பௌச் வைத்துக் கொள்ள வேண்டாமா?” என்று இன்று என்னை நானே கடிந்து கொண்டேன்.  அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.  சென்ற பயணத்தின் போது என்னுடைய ஷேவிங் சாதனங்களை மானாங்கண்ணியாக சூட்கேஸில் போட்டு வைத்திருந்தேன்.  பிறகு பயணம் கிளம்பும் போது உள்ளே இருக்கும் புத்தகம் ஒன்றை விமானத்தில் படிப்பதற்காக வெளியே எடுக்க வேண்டியதாயிற்று.  அப்போது கையை உள்ளே விட்டேனா?  தேள் கடித்தாற்போல் – ம்ஹும், அதை விட பயங்கரமாக ஏதோ ஒன்று விரலைக் கிழித்தது – பார்த்தால் ஷேவிங் பிளேடு ஆட்காட்டி விரலைப் பதம் பார்த்திருந்தது.  கொரியத் திரைப்படங்களில் வருவது போல் ஒரே ரத்தம்.  ரத்த அடைப்பு வரக் கூடாது என்பதற்காக பல ஆண்டுகளாக Blood thinner மாத்திரை உட்கொள்வதால் காயம் பட்டால் ரத்தம் சுலபத்தில் நிற்காது.  இன்னொரு பிரச்சினை, அவந்திகாவுக்குத் தெரிந்தால் ரொம்ப ஆபத்து.  பயணமே வேண்டாம் என்று சொல்லக் கூடும்.  அப்படியே துணியால் கட்டிக் கொண்டு தப்பி விட்டேன்.  வழியிலேயே ஒரு மருந்துக் கடையில் நிறுத்தி மருந்து போட்டுக் கொண்டுதான் போனேன்.  ஆனாலும் ஒரு பதினைந்து நாட்களுக்கு செம வலி.   இந்த முறை ஒரு பௌச் வாங்கி விடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.  நண்பர்கள் யாரும் பௌச் வாங்கி அனுப்ப வேண்டாம்.  எனக்கு flap வாங்கிக் கொடுத்த நண்பரிடமே பௌச்சும் கேட்டிருக்கிறேன்.   ஆமாம், இதெல்லாம் ஏன் எனக்கு ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே தோன்றாமல் போயிற்று? 

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai