<a href=”https://www.tripadvisor.in/LocationPhotos-g295425-Vina_del_Mar_Valparaiso_Region.html#385808748″><img alt=”” src=”https://media-cdn.tripadvisor.com/media/photo-s/16/fe/f9/6c/passeio-bacana.jpg”/></a><br/>This photo of Vina del Mar is courtesy of TripAdvisor
மேலே உள்ள இணைப்பில் காணும் ஊர் வீஞா தெல் மார் (Viña del Mar). Vineyard of the sea என்று பொருள். இந்த ஊர் வால்பரைஸோ நகரின் உப நகராக உள்ளது. வால்பரைஸோவிலிருந்து நான்கு கிலோமீட்டர். இரண்டு நகர்களுமே கடற்கரை நகரங்கள். சீலே செல்பவர்கள் வால்பரைஸோ செல்லாமல் வர மாட்டார்கள். பாப்லோ நெரூதாவின் ஊர். வால்பரைஸோவின் மற்றொரு சிறப்பு, இங்குள்ள எல்லா வீடுகளுமே வண்ணமயமானவை. வால்பரைஸோ என்று கூகுளில் போட்டுப் பாருங்கள். காப்பிரைட் பிரச்சினை இருப்பதால் என்னால் எடுத்துப் போட முடியவில்லை. இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், சீலே செல்பவர்கள் பாப்லோ நெரூதா வாழ்ந்த வால்பரைஸோ போய்விட்டு வந்து விடுவார்கள். ஆனால் அதன் பக்கத்தில் உள்ள வீஞா தெல் மார் பற்றித் தெரியாது. உங்களுக்கு நீங்கள் பிறந்து வளர்ந்த ஊர் எப்படியோ அதே போன்ற முக்கியத்துவம் உள்ளதுதான் எனக்கு வீஞா தெல் மார். வீஞா தெல் மார் உலகின் மிக அழகான நகரங்களில் ஒன்று. சீலேவில் எங்கெல்லாம் போக வேண்டும் என்று அட்டவணை தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் பயணம் SOTC என்ற பயண நிறுவனத்தின் மூலம் customized tour ஆகப் போகிறேன். ஆனால் நான் நினைக்கும் உண்மையான பயணம் இது அல்ல. காரணம் சொல்கிறேன். சந்த்தியாகோ தெ சீலேவிலிருந்து வால்பரைஸோ 115 கி.மீ. தூரம் இருக்கிறது. என் பயண நிறுவனம் ஒரு வேன் மூலமாக எங்களை சந்த்தியாகோவிலிருந்து வால்பரைஸோவுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். ஆனால் வால்பரைஸோவுக்கு நீங்கள் அப்படிப் போகக் கூடாது. ஒரு தேசத்தை சரியான முறையில் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், அதற்கு அந்த லோக்கல் மனிதர்கள் என்ன செய்கிறார்களோ அதைச் செய்ய வேண்டும். அவர்கள் சந்த்தியாகோவிலிருந்து வால்பரைஸோவுக்கு வேனில் செல்வதில்லை. அதற்கு மெத்ரோ இருக்கிறது. காலை 7.30 – 9.30 மற்றும் மாலை 5.30 – 7.30 ஆகிய நேரங்களைத் தவிர்த்து மெத்ரோவில் பயணம் செய்ய வேண்டும். அல்லது லோக்கல் பஸ்களும் உள்ளன. அதற்கு அராத்து தான் சரியான நபர். அவர் இப்போது கடும் வேலை நெருக்கடிகளில் இருப்பதால் பயண நிறுவனத்தின் உதவியை நாட வேண்டியுள்ளது.
அதேபோல் லீமா (பெரூ) என்றால் எல்லோரும் அங்கே உள்ள அழகிய பகுதியான மீராஃப்ளோரெஸுக்கு அழைத்துச் சென்று காண்பிப்பார்கள். ஆனால் லீமாவில் ஸான் ஹுவான் தெ மீராஃப்ளேரெஸ் (San Juan de Miraflores) என்று ஒரு பகுதி இருக்கிறது. SJM என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். நம் நொச்சிக்குப்பத்தைப் போன்ற ஒரு பகுதி அது. நம்மூர் பஜாஜ் ஆட்டோவையெல்லாம் அங்கே பார்க்கலாம். ஸான் ஹுவானை சுற்றுலாப் பயணிகள் பார்த்து விடக் கூடாது என்பதற்காகவும், ஸான் ஹுவானின் ஏழ்மையின் வீச்சம் மீராஃப்ளேரெஸில் அடித்து விடக் கூடாது என்பதற்காகவும் ஒரு நீண்ட மதில் சுவரை நகர் முழுவதும் கட்டியிருக்கிறார்கள். அந்தச் சுவர்தான் மீராஃப்ளோரெஸிலிருந்து ஸான் ஹுவானைப் பிரிக்கிறது. அந்தச் சுவரையும் ஸான் ஹுவானையும் நான் பார்த்தே ஆக வேண்டும்.
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai