பெரூ – பொலிவியா – சீலே (பயணக் குறிப்புகள் – 3)

ஒரு தகவல்: என் தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் பணம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

***

பயணத்துக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கும் நிலையில் நான் இன்னுமே பயணத்துக்கு சரியாகத் தயார் செய்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது.  உடல்நலத்துக்கு வேண்டிய எல்லாமும் செய்தேன். கடந்த மூன்று மாதமாக தினமும் ஒருவேளை ஏபிசி ஜூஸ் குடித்தேன்.  கேரட், பீட்ரூட், ஆப்பிள் மூன்றையும், அதோடு கொஞ்சம் இஞ்சியையும் தோல் சீவி ஜூஸரில் போட்டு அடித்துக் குடிக்க வேண்டும்.   எழுத சுலபம்தான். செய்வது ரொம்ப சிரமம்.  அதோடு, தினமும் ஒரு மாதுளை.  ஏன் இந்தத் தயாரிப்பு என்றால் மாச்சு பிச்சு 8000 அடி.  பக்கத்தில் நாங்கள் தங்கப் போகும் குஸ்கோ  12000 அடி. அதிலும் பயணத்தின் ஆரம்பமே பெரூதான்.  இதயப் பிரச்சினை உள்ளவர்கள் இங்கே வராதீர்கள் என்கிறான் பெரூகாரன்.  எனக்கோ இதயத்தில் 50 சதவிகித அடைப்பு. தினமும் பனிரண்டு மாத்திரை.  ஆனாலும் 12000 அடி உயரம் உள்ள சார்ச்சுவுக்குப் போய் வந்ததால் கொஞ்சம் தைரியம் வருகிறது.  கொக்கா இலைகளை மென்று கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் கொக்கா தேநீர் குடியுங்கள் என்கிறது பெரூ சுற்றுலாத் துறை. ஆனால் எக்காரணம் கொண்டும் கொக்கா இலைகளை கையோடு எடுத்து வந்து விடக் கூடாது. அது கஞ்சாவைப் போன்றது.  

இந்தத் தயாரிப்பு எல்லாம் ஒழுங்காக நடந்து விட்டாலும் குளிரைத் தாங்கும் உடைகள்?  இன்னும் கையுறை வாங்கவில்லை. பொலிவியா முழுவதும் மலைநாடு.   இரவில் குளிர் பூஜ்யத்துக்கும் கீழே போகுமாம்.  சென்னை போன்ற ஒரு ஊரில் கையுறை கேட்டால் உதைக்க வருவார்கள். கொளுத்தும் வெயிலில் தண்ணீர் இல்லாமல் நாங்கள் வழக்கமாக சாப்பிடும் ரத்னா கஃபேயில் தட்டுக்குப் பதிலாக வாழை இலை போடுகிறார்கள்.  இன்று ஒரு கொடூரம் நடந்தது. கழுவாத இலையில் ஆனியன் ரவா தோசையைப் போட்டு, அதன் மேலேயே மற்றொரு இலையில் மற்றொரு ஆனியன் ரவாவைப் போட்டுக் (இது ராமசேஷனுக்கு…) கொண்டு வந்து விட்டான் பையன்.  இலை என்ன கதியில் இருந்ததோ கடவுளுக்கே வெளிச்சம்.  ஆனால் பிரச்சினை அது அல்ல; என் தோசையோடு ராமசேஷனின் இலையின் அடிப்பாகம் ஒட்டிக் கொண்டு விட்டது. பையன் அதை எடுப்பதில் சிரமப்பட்டான். அப்புறம் ஒரு வழியாக நானும் அவனும் சேர்ந்து அந்த தோசையை என் இலையிலிருந்து பிரித்தெடுத்தோம். இந்த இலை ஏற்பாடு எதற்கு என்றால், தட்டு கழுவ தண்ணீர் இல்லை. அதனால்தான் இலையையும் கழுவவில்லை என்று தெரிந்து கொண்டோம்.  Living a bastard life in a bastard country என்று Breytan Breytanbach ஒரு இடத்தில் சொல்லியிருப்பார்.  அதுதான் இந்த சென்னையைப் பற்றி யோசித்தால் ஞாபகம் வருகிறது.

பொலிவியாவுக்குப் போக வேண்டும் என்றால் yellow fever vaccination போட்டு அதற்கான சான்றிதழை கையிலேயே வைத்திருக்க வேண்டும் என்று என் பயண நிறுவனம் சொன்னது.  சொல்லி ஐந்து நாட்கள் இருக்கும்.  நான் வரும் 27 கிளம்புகிறேன். அந்த ஊசி போட 500 ரூ கட்ட வேண்டும்.  அதை ஆன்லைனிலேயே கட்டி விடலாம் என்றார்கள்.  அரை மணி நேரம் அந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தேன்.  கடைசியில் பணம் கட்டுவதற்கு முன்பு கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் எனக்கு அறிவுறுத்தியது.  நாலு வாரத்துக்கு முன்பே நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டும்!!! எனக்கோ பயணத் தேதி நெருங்கி விட்டதால் ஒரு மாதமெல்லாம் காத்திருக்க முடியாது.  வரும் வெள்ளிக்கிழமையே (21 ஜூன்) போட வேண்டும்.   இப்போது இதற்காக முதல் மந்திரியைப் பிடிக்கலாமா அல்லது பிரதமரைப் பிடிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  அப்படிப்பட்ட நாடுதானே இது?    

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai