நான் ஊருக்குப் போவதால் ராஸ லீலா கலெக்டிபிள் வேலை இன்னும் 25 நாட்கள் தள்ளிப் போகிறது. பணம் அனுப்ப விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 20 தேதிக்குள் பணம் அனுப்பி, புகைப்படமும் அனுப்பி இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். அது பற்றிய விபரம்:
ராஸ லீலா கலெக்டிபிள் பற்றி முன்பு எழுதிய குறிப்பை இங்கே மீள்பதிவு செய்கிறேன். ஏனென்றால், பல நண்பர்கள் இது பற்றி எதுவும் தெரியாது என்றே சொன்னார்கள். சில நெருங்கிய நண்பர்களிடம் நானே தான் ஃபோன் செய்து ராஸ லீலா கலெக்டிபிள் பற்றி விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது. சில நண்பர்களிடம் அது கூட சொல்லவில்லை. அவர்களுக்கு இன்னமும் தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன். அமெரிக்காவிலிருந்து இரண்டு பேர், துபாய் ஷார்ஜாவிலிருந்து மூன்று பேர் இந்த கலெக்டிபிள் திட்டத்துக்குப் பணம் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து 25 பேர் பணம் அனுப்பி விட்டார்கள். இலங்கையிலிருந்து எப்படிப் பணம் அனுப்புவது என்று ஓரிரு நண்பர்கள் கேட்டிருந்தார்கள். அவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். charu.nivedita.india@gmail.com
ராஸ லீலா கலெக்டிபிள் மூலம் கிடைக்கும் பணத்தை என் பயணங்களுக்கே பயன்படுத்துவேன். ராஸ லீலா கலெக்டிபிளின் விலை ரூ.10,000/- இதன் மதிப்பு இப்போது தெரியாது. சுமார் ஐந்து ஆண்டுகள் ஆன பிறகே இந்தப் பிரதியின் மதிப்பு தெரிய வரும். நெப்போலியன் காலத்திய கோனியாக் இப்போதும் கிடைக்கிறது. விலை இரண்டரை லட்சம் ரூபாய்.
’கலெக்டிபிள்’ என்றால் அதன் பின் அட்டையில் ராஸ லீலாவின் அந்தப் பிரதியைப் பெற்றுக் கொண்டவரும் நானும் சேர்ந்த புகைப்படம் இடம் பெறும். அதாவது, ஒவ்வொரு பிரதியையும் தனித்தனியே அச்சடிக்க வேண்டும். கிட்டத்தட்ட handmade காஷ்மீர் கம்பளம் மாதிரி. மட்டுமல்லாமல், புத்தகத்தின் முதல் பக்கத்தில் அந்த காப்பியை நான் யாருக்குக் கொடுத்திருக்கிறேனோ அவரைப் பற்றிய என்னுடைய சிறு குறிப்பும் அச்சிடப்பட்டிருக்கும். உதாரணமாக, கணேஷ் அன்புவின் பிரதி என்றால் அந்தப் பிரதியின் பின்னட்டையில் கணேஷ் அன்புவும் நானும் உள்ள புகைப்படம் இருக்கும். முதல் பக்கத்தில் கணேஷ் அன்பு பற்றி நான் எழுதிய குறிப்பு ஒன்றும் இருக்கும். ஒரு காப்பியின் தயாரிப்புச் செலவே 2000 ரூபாய் ஆகும். எனவே யார்யாரால் முடிகிறதோ அவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஜூன் பத்தாம் தேதியுடன் இத்திட்டம் முடிவுக்கு வருகிறது. அநேகமாக உலக அளவில் புத்தகத் தயாரிப்பில் இப்படி ஒரு collector’s copy தயாரிக்கப்பட்டதில்லை என்று நினைக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் எனக்கு எழுதுங்கள்: charu.nivedita.india@gmail.com
எனவே முடிந்தவரை ராஸ லீலா கலெக்டர்’ஸ் காப்பி திட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். ஒரு பிரதி விலை 10,000/-
விபரம் தேவையெனில் எழுதுங்கள்: charu.nivedita.india@gmail.com
***
பணம் அனுப்புவதற்கான வங்கிக் கணக்கு விவரம் கீழே. Google pay மூலமும் அனுப்பலாம். கூகிள் பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் தேவை. நீங்கள் எனக்கு எழுதினால் அனுப்புகிறேன்.
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
K என்பதன் விரிவு Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai