பெயரைக் குறிப்பிட்டு எழுதினால் எல்லோரும் சண்டைக்கு வருகிறார்கள். நான் சொல்ல வந்ததன் அடிப்படையையே புரிந்து கொள்ளாமல் திட்டி எழுதி விட்டேன், திட்டி எழுதி விட்டேன் என்றே அழுது புலம்புகிறார்கள். பத்து வயசுப் பொடியனிலிருந்து என்னை விட வயது முதிர்ந்தோர் வரை அதே ரகம்தான். ஒரு இருபது வயதுப் பையன் என்னை ஆறு மாதம் கழித்துச் சந்திக்கிறான். முதல் வார்த்தை ”எப்டி இருக்கீங்க அங்கிள்” இல்லை. ”என்னை என்னா திட்டி எழுதியிருக்கீங்க?” என்னுடைய ஒரு எழுத்தைக் கூட படித்ததில்லை. ஆனால் என்னைப் பற்றி எப்படிப்பட்ட இமேஜ் வைத்திருக்கிறான் பார்த்தீர்களா? இதோ, இப்போது அவனைத் “திட்டி” எழுதி விட்டேன். இதை விடக் கொடுமை, எனக்குத் தெரிந்த ஒரு இயக்குனர் என்னை எதேச்சையாக ப்ரூ ரூமில் பார்த்த போது எப்டி இருக்கீங்க சார் என்று கேட்கவில்லை. இப்போ யாரைத் திட்டி எழுதிருக்கீங்க சார் என்று கேட்டார். பத்து வருஷத்துக்கு முந்தின சாருவாக இருந்தால் உங்க ஆயாவைத் திட்டி என்று சொல்லியிருப்பேன். இப்போது இந்தி, பஞ்சாபி, ஆங்கிலம், தமிழ் மொழிகளில் உள்ள எல்லா வசைகளும் மனதில் ஓட, வெறுமனே சிரித்து வைத்தேன்.
இப்படிப்பட்ட நிலையில் பெயரைக் குறிப்பிட்டு எழுதினால் நான் எழுதியிருக்கும் விஷயம் காணாமல் போய் பெயர் குறிப்பிடப்பட்ட விஷயம் மட்டுமே பெரும் அக்கப்போர் ஆகி விடுகிறது. எனவே இங்கே பெயர்கள் முக்கியம் அல்ல. மேலும், நான் யாரையும் விமர்சிக்கவும் இல்லை. நான் நீண்ட காலமாகச் சொல்லி வரும் ஒரு கருத்துக்கு வலுவான சான்று கிடைத்திருப்பதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான். ஒரு பிரபல எழுத்தாளர் பற்றிய மற்றொருவரின் மேடைப்பேச்சைக் கேட்க நேர்ந்தது. பிரபல எழுத்தாளர் மிக மிக வறுமையில் வாழ்ந்த காலகட்டம். ஒண்டுக் குடித்தனம். நம் பாரதி மாதிரி. அப்போது அந்த எழுத்தாளரின் வாசகர் ஒருவர் தங்க நகைகளையும் பணக் கத்தைகளையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் வைத்து எழுத்தாளரிடம் கொடுக்க, அதை அந்த எழுத்தாளர் இது தேவையில்லை என்று மறுத்து விட்டார். அதையெல்லாம் பேச்சாளர் மிகவும் நாடகீயமாக விளக்குகிறார். எழுத்தாளர் மறுக்கும்போது இந்தப் பேச்சைக் கேட்பவர்கள் கரகோஷம் எழுப்புகிறார்கள்.
’அடப்பாவிகளா! ஒரு எழுத்தாளன் வறுமையில் வாடுவதைப் பார்த்து ரசிக்கிறீர்களே, பாராட்டுகிறீர்களே, கைதட்டுகிறீர்களே! நீங்களெல்லாம் மனிதப் பிறவிகள்தானா?’ என்று எனக்குக் கேட்கத் தோன்றியது. இதைத்தான் நாம் பல ஆண்டுகளாகக் குறிப்பிட்டு வருகிறேன் – தமிழர்கள் necrophilia நோய்வாய்ப்பட்டவர்கள் என்று! பிணத்தைக் கொண்டாடுபவர்கள்! எழுத்தாளனின் மரணத்தைக் கொண்டாடுபவர்கள்! எழுத்தாளன் வறுமையில் கிடப்பதை வியந்து பாராட்டுபவர்கள்! எப்பேர்ப்பட்ட சமூகம் பாருங்கள் இது! இதனால்தான் என்னைத் திட்டுகிறார்கள் நீ மட்டும் எப்படிப் பணம் கேட்கலாம்? நீயும் மற்ற எழுத்தாளன்களைப் போல் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதானே? அப்போதுதானே உனக்கு சிலை வைத்து மாலை போட முடியும்?
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai