6. நிகழும் அற்புதம்

நான் யாருக்கும் ஒருபோதும் அறிவுரை சொல்வதில்லை.  சுய அனுபவம்தான் காரணம்.  இருபத்தைந்து வயது வரை யாரும் எனக்கு அறிவுரை சொன்னதில்லை.  குறிப்பாக என் பெற்றோர்.  அதற்குப் பின் யார் யாரெல்லாம் எனக்கு அறிவுரை சொல்கிறார்களோ அவர்களையெல்லாம் நான் ஒதுக்கி வைக்க ஆரம்பித்தேன்.  இருபத்தைந்து வயது வரை அறிவுரை சொல்லாத பெற்றோர் அதற்குப் பிறகு எனக்கு அறிவுரை சொன்னார்கள்.  வீடு வாங்கு.  ஒரு வருடம் போய்ப் பார்க்க மாட்டேன்.  குடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் சில அன்பர்கள் அதிகம் குடிக்காதீர்கள் என்று அறிவுரை பகர்வர்.  அப்படிச் சொல்பவர்கள் ஒரு வேளை உணவு கூட ஒழுங்காகச் சாப்பிட முடியாதவர்களாக இருப்பார்கள். அந்த அளவுக்கு ஆரோக்கியம் குன்றியிருப்பார்கள்.  அவர்கள் எனக்கு அறிவுரை.  இதுவரை நான் யாரையும் குடிக்காதீர் என்று சொன்னதில்லை.  குடிக்கவும் சொன்னதில்லை. 

ஒரு நெருங்கிய நண்பர்.  ரொம்ப நெருக்கம்.  என் உறவு மாதிரி.  பணக்கார வர்க்கம்.  ஆறு அடிக்கு மேல்.  வயது முப்பத்தைந்து.  அந்தக் காலத்தில் அருண் பாண்டியன் என்று ஒரு நடிகர் இருந்தாரே அவரை விட ஆளுமையாக இருப்பார்.  துடிப்பான கண்கள்.  ஆனால் எப்போதும் ஒரு சோர்வு தெரியும்.  தினமும் அரை பாட்டில் மட்டமான ரம் குடிப்பார்.  உங்கள் வசதிக்கு ஸ்காட்ச்சே குடிக்கலாமே என்பேன்.  எனக்கு ஸ்காட்ச் எல்லாம் பிடிக்காதே சாரு என்பார்.  சரியான தூக்கமும் இல்லை.  சிகரெட் உண்டு.  அதைவிட மாவா என்கிற கடும் போதை வஸ்துவைப் போட்டு வாயில் அதக்கியபடி இருப்பார்.  எவ்வளவு குடித்தாலும் நிதானமாக இருப்பார்.  மகாத்மா என்றால் அப்படி ஒரு மகாத்மா.  உத்தமன்.  இவர் வாரம் ஒருமுறையோ இரண்டு முறையோ குடித்தால் போதும் என்று பிரார்த்தனை செய்து கொள்வேன்.  அவரிடம் சொல்வதை விட ஆண்டவனிடம் சொல்லலாம். பிரச்சினை இல்லை.  ஆ, சொல்ல மறந்து விட்டேனே, வாரம் மூன்று முறை டயாலிஸிஸ்.  ஆனாலும் படு உற்சாகமாக இருப்பார்.  வாரம் ஒருமுறை டயாலிஸிஸ் செய்து கொள்பவர்களே டஞ்ஜனாகப் பேசுவார்கள்.  இவரோ ஒரு தீவிர ஹெடோனிஸ்டாகத் துள்ளுவார். 

ஒரு வருடமாக ஆளைக் காணோம்.  ஒன்றிரண்டு முறை போன் பண்ணிப் பார்த்து விட்டு நானும் விட்டு விட்டேன்.  ஆனால் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்.  அதை மட்டும் நிறுத்தவில்லை. ஏனென்றால், இவரைப் போன்ற மனிதர்களின் எண்ணிக்கை உலகில் அதிகம் இருந்தால் உலக வாழ்க்கை இன்னும் நன்றாக இருக்கும்.

நேற்று போன் செய்து வீட்டுக்கு வருகிறேன் என்றார்.  வந்தார்.  ஆளே மாறியிருந்தார்.  வேறு ஆள் போல் இருந்தது.  முகத்தில் தேஜஸ்.  உடம்பு கிண்ணென்று இருந்தது. 

என்னங்க விஷயம் என்றேன். 

ஒண்ணுமில்லையே சாரு. 

ஜிம்முக்குப் போறீங்களா? 

இல்லையே. 

டயட்? 

இல்லையே. 

வேறு என்ன? 

குடிப்பதை நிறுத்தி விட்டேன். 

ஓ. அட்டகாசம்.  எப்படி?

ஒரு மாசம் லாக் டவுன் வந்ததா?  வீட்டிலேயே இருந்தேன்.  அதுவே பழகி விட்டது.

சிகரெட்?

நோ.  அதையும் விட்டு விட்டேன்.

அந்த மாவாவோ காவாவோ?  புகையிலை?

அதுவும் போச்சு.

அதிசயமாக இருந்தது.  இன்னொரு கேள்வி.

குடிப்பவர்களோடு உட்காருகிறீர்களா?

ஆமாம் சாரு.  எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அவர்கள் குடிப்பதை வேடிக்கை பார்க்க முடிகிறது.  டயாலிஸிஸ் கூட வாரம் ஒருமுறைதான். 

சீக்கிரம் அதுவும் இல்லாமல் முழுமையாகச் சரியாகி விடும்.

மார்ச்சிலிருந்தே வீட்டில்தான் இருக்கிறாராம்.  சரி, இப்போது எங்கே கிளம்பினீர்கள் திடீரென்று?

பூனை உணவுக்காக நீங்கள் கடைக்குக் கிளம்புகிறேன் என்று எழுதியிருந்தீர்களே.  இந்தாருங்கள் பூனை உணவு. 

கலிகாலத்திலும் அற்புதங்கள் நிகழத்தான் செய்கின்றன.   

***

என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள்.  மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai