சி.சு. செல்லப்பா பற்றிய என் உரை 31.5.2020 அன்று நடந்தது. காலை ஆறு மணி. இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடம் பேச்சு. நீங்கள் இதை முழுமையாக ஒரே மூச்சில் கேட்க முடியாமல் போனால் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கலாம். செல்லப்பாவின் எழுத்தில் ஒரு பதினைந்து ஆண்டு காலம் செலவிட்டிருக்கிறேன். இதை ஸூம் சந்திப்பின் மூலம் சாத்தியப்படுத்தினோம். உலகின் பல மூலைகளிலிருந்து வாசகர்கள் கேட்டனர். சதீஷ்வர் ஒருங்கிணைத்துக் கொடுத்தார். ஸூமின் பாஸ்வேர்ட் போன்ற விவரங்களைக் கொண்டுதான் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்ற திட்டம் வைத்திருந்ததால் சுமார் எண்பது பேர் கலந்து கொண்டார்கள். இதையே முகநூலில் கொடுத்திருந்தால் இதை விட அதிகம் பேர் கேட்டிருக்கலாம். கூட்டம் முடிந்த பிறகு இதை யூட்யூபில் வெளியிட வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.
https://drive.google.com/file/d/1HcXZdGndQ9ein5tZDBq2KoJL0HG755lm/view?usp=sharing
பணம் அனுப்பினால் பேச்சின் காணொலியை அனுப்புகிறேன் என்று சொன்னேன். ஐம்பது பேர் பணம் அனுப்பி
வாங்கிக் கொண்டார்கள். எவ்வளவு பணம், எவ்வளவு கட்டணம் என்பதை நீங்களே தீர்மானம் செய்து
கொள்ளலாம் என்று சொன்னேன். ஒருவர் ரெண்டாயிரம் அனுப்பினார். ஒருவர் நூறு அனுப்பினார். சில மாணவர்கள் பணம் அனுப்ப இயலாது என்றார்கள். எழுதிக் கேட்ட எல்லோருக்கும் அனுப்பி வைத்தேன்.
இப்போது இதை உங்களுக்கு வழங்குகிறேன். இதற்காக இரண்டு வாரம் இரவு பகலாக உழைத்தேன். செல்லப்பாவின் படைப்புகளை மீண்டும் படித்தேன். இந்தக் காணொலியைக் கேட்பதற்கான கட்டணத்தை நீங்களே நிர்ணயித்துக் கொண்டு பணத்தை அனுப்பி வைக்கலாம். முடியாவிட்டால் இலவசமாகக் கேட்கலாம். ஐந்தாயிரம் பேராவது கேட்டால் மகிழ்ச்சி அடைவேன். நண்பர்களுக்கும் சொல்லுங்கள். இது குறித்து யோசனைகள் இருந்தால் எழுதுங்கள்.
charu.nivedita.india@gmail.com
***
உரைக்கான கட்டணம் அனுப்புவதற்கான விவரம்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai
***