இன்று (சனிக்கிழமை) இந்திய நேரம் இரவு 9 மணிக்கு அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கலையும் வாழ்க்கையும் என்ற தலைப்பில் பேசுகிறேன். (அமெரிக்க நண்பர்கள் தங்கள் நேரத்தை இதற்குத் தக்கபடி கணக்கிட்டுக் கொள்ளுங்கள்) ஒரு மணி நேரம் பேசுவேன். கேட்க விருப்பப்படும் நண்பர்கள் கேட்கலாம். சக எழுத்தாளர்களுக்குப் புதிதாக ஒன்றும் இருக்காது என்பதை இப்போதே உறுதி கூறி விடுகிறேன். எழுத்தாளர்கள் குறித்த என்னுடைய வழக்கமான பேச்சு அல்ல இது. வாழ்க்கையைக் கலாபூர்வமாக வாழ்வது எப்படி என்று பேசுவேன். எழுத்தாளர்கள் ஏற்கனவே கலாபூர்வமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதால் அவர்கள் கேட்டால் ஒன்றும் ரசமாக இருக்காது. இதையும் தாண்டி வந்தால் ஏமாற்றங்களுக்கு நான் பொறுப்பு அல்ல. புதியவர்கள் வரலாம். வந்தால் வாழ்க்கை மேன்மையுறும், இனிமையுறும் என்று உறுதியளிக்கிறேன்.
பேச்சைக் கேட்க யூட்யூப் இணைப்பு