உயிரின் நெருப்பை ஊதி வளர்த்தவனின் நாட்குறிப்புகள்
மேற்கண்ட தலைப்பில் என்னுடைய அடுத்த புத்தகம் வெளிவருகிறது. ராஸலீலா பதிப்பகம். அந்த நூலுக்காக நிர்குண் வரைந்த சித்திரம் கீழே:
மேற்கண்ட தலைப்பில் என்னுடைய அடுத்த புத்தகம் வெளிவருகிறது. ராஸலீலா பதிப்பகம். அந்த நூலுக்காக நிர்குண் வரைந்த சித்திரம் கீழே:
அவந்திகாவுடன் இருந்தால் எல்லாம் ராணுவ ஒழுங்குடன் நடந்தேறும். இரவு பதினோரு மணிக்கு உறங்கச் செல்வேன். காலை ஐந்தரைக்கு எழுந்து கொள்வேன். இது ஒருநாள் கூட தவறாமல் செவ்வனே நடக்கும். ஆனால் அவந்திகா ஊரில் இல்லாவிட்டால் இந்த ஒழுங்கு கொஞ்சம் கெடும். சில தினங்களில் அதிகாலை வரை வேலை செய்வேன். அதில்தான் ஒரு சிக்கல் இருக்கிறது. வீட்டை சுத்தம் செய்யும் பணிப்பெண் சரியாக ஒன்பதரைக்கு வருவார். அதனால் நம் விருப்பப்படி ஏழு மணி நேரமெல்லாம் தூங்க முடியாது. எப்போது … Read more
அன்பு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு முடிந்து விட்டது. அதற்கு நான் மொழிபெயர்ப்புக் கட்டணம் மூன்று லட்சம் கொடுக்க வேண்டும். ஏற்கனவே எழுதியிருந்தபடி, என் நண்பர் மாதாமாதம் அளித்து வந்த பண உதவியை நிறுத்தி விட்டதால் இந்த விஷயத்தை இங்கே எழுதுகிறேன். ஒரு லட்சம் ரூபாயோ அதற்கு மேலோ அளிப்பவர்களின் பெயரை அல்லது அவர்களின் நிறுவனத்தின் பெயரை டெடிகேஷன் பக்கத்தில் போடுவேன். ஔரங்ஸேப் வெளிவந்த சமயத்தில் ஒரு நண்பர் ஐந்து லட்சம் அனுப்பினார். இப்போது மொழிபெயர்ப்பு. இந்தியாவின் முக்கியமான … Read more
சென்ற மாதம் ஒரு சர்வதேச இலக்கியக் கருத்தரங்குக்காக அழைக்கப்பட்டு சென்றிருந்தேன். நிதி உதவி எதுவும் இல்லாமல் நடத்தப்படும் கருத்தரங்கு என்பதால் நம் செலவில்தான் போக வேண்டும், தங்க வேண்டும். மிகச் சிறிய அறை. வொர்லி என்ற பகுதியில் காந்தி நகர். முதல் நாளே கட்டிலில் இடித்துக்கொண்டேன். இடது முழங்காலில் வலது பக்கம். தேள் கொட்டியது போல் வலித்துக்கொண்டே இருந்தது. கருத்தரங்கம் முடிந்து சென்னை திரும்பி விட்டேன். கட்டிலில் இடித்ததையும் முழுமையாக மறந்து போனேன். டாக்டர் பாஸ்கரனின் சொன்னேன். … Read more
இருபது ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் என் நைனா எனக்கு ஃபோன் செய்து இந்த வாரம் உன் வீட்டுக்கு நானும் அம்மாவும் வருகிறோம் என்றார்கள். பொறுங்கள், அவந்திகாவை ஒரு வார்த்தை கேட்டு விட்டுச் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு அவளைக் கேட்டேன். இந்த வாரம் வேண்டாம், அடுத்த வாரம் வரச் சொல் என்றாள். நான் கேட்டேன், இப்போது இருவரின் வயதும் எண்பத்தைந்தைத் தாண்டி விட்டது, அடுத்த வாரத்துக்குள் அவர்கள் இறந்து போனால் என்னை ஒரு மகாராஜாவைப் போல் வளர்த்த … Read more
சீனி அளவுக்கு எனக்கு க்ரியேட்டிவ் யோசனைகள் சொன்ன நண்பர்கள் யாரும் இல்லை. யாராவது வருவார்களா, அவரை வெல்வார்களா, மீறுவார்களா என்று நானும் பதினைந்து ஆண்டுகளாகக் காத்துக்கொண்டிருக்கிறேன். ஒருத்தரும் இல்லை. இன்று சற்று நேரம் முன்னால் சீனி ஒரு கதை சொன்னார். அதேபோல் நானும் ஒன்று சொன்னேன். உடனே சீனி இதை நீங்கள் ஒரு நாவலாக எழுதலாமே என்றார். அந்தக் கணம் வரை அப்படி எனக்குத் தோன்றவே இல்லை. நானும் அந்தக் கதையை ஒரு தோழியிடம் சொல்லியிருந்தேன். ஆனால் … Read more