ஒரு விளக்கம்

மதிப்பிற்குரிய………முதலில் தங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.நான் உங்களை எழுத்தாளரே என்று கூறியது தங்களை காயப்படுத்தி இருந்தால். உங்களை அப்படி அழைப்பதில் எனக்கொரு ஆத்ம த்ருப்தி. நடிகர் துறவி போன்றோர் வரிசையில் உங்களை நான் வைக்க எனக்கு இஷ்டமில்லை.ஒரு மன்னனை புலவரை நெருக்கமான நண்பனை எப்படி அழைப்போமோ அப்படி அழைக்கத்துணிந்தேன்.ஶ்ரீலங்கா விஷயத்தில் டிவி,பேப்பரில் வரும் விஷயங்களை நம்ப நான் தயாராக இல்லை. அது நம்பத்தகுந்தது இல்லை என்பது என்கருத்து.நான் முழுக்கநம்புவது தங்களை போன்ற முதிர்ந்த அதே சமயத்தில் யாரிடமும் சமரசம் … Read more

ராஸ லீலா – முன் வெளியீட்டுத் திட்டம்

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு எக்ஸைல் நாவல் வெளிவந்த போது முதல் பிரதியை ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார் ஒரு நெருங்கிய நண்பர்.  முதல் பிரதி என்றால் அந்தக் குறிப்பிட்ட பிரதியில் முதல் பிரதி என்று போட்டு கையெழுத்துப் போட்டுத் தருவேன்.  இரண்டாவது பிரதியை மற்றொரு நெருங்கிய நண்பர் 50,000 ரூபாய்க்கு பெற்றுக் கொண்டார்.  அந்தப் பிரதிகள் எக்ஸைல் வெளியீட்டு விழாவில் விழா மேடையில் அந்த நண்பர்களை அழைத்து அவர்களுக்கு வழங்கப்பட்டது.  மற்றும் பத்து நண்பர்கள் நூலை … Read more

எதை எழுத வேண்டும்?

இஸ்லாமிய வெறுப்பைத் தவிர அநேகமாக மற்ற எல்லா விஷயங்களிலும் மிஷல் வெல்பெக்குக்கும் (Michel Houllebecq) எனக்கும் ஒத்த தன்மைகளைப் பார்க்கலாம்.  அதில் ஒன்று செக்ஸ்.  இன்னமும் அவரை செக்ஸ் எழுத்தாளர் என்றே பெரும்பாலோர் அழைக்கின்றனர்.  அவரும் அதை ஒத்துக் கொள்ளவே செய்கிறார்.  ஐரோப்பாவில் ஒரு எழுத்தாளர் செக்ஸை எழுதுவதைத் தவிர்க்கவே முடியாது என்கிறார்.  இங்கே (ஐரோப்பாவில்) சிலருக்கு செக்ஸ் தினமும் கிடைக்கிறது.  ஆனால் பலருக்கோ அவர்கள் வாழ்நாளிலேயே ஐந்தாறு தடவைகள்தான் கிடைக்கிறது.  சிலருக்கு வாழ்வில் ஒருமுறை கூட … Read more

கண்ணதாசன் விருது

கோவை கண்ணதாசன் கழகம் சார்பில் கவியரசர் பிறந்தநாளையொட்டி கலைத்துறையிலும் இலக்கியத் துறையிலும் முத்திரை பதிப்போருக்கு கண்ணதாசன் விருதுகள் சமர்ப்பிக்கப்பட்டு  வருகின்றன.  விருதுகள் இரண்டு பெருமக்களுக்கு தலா ரூ.1 இலட்சம் ரொக்கத் தொகை மற்றும் பட்டயம் கொண்டதாக சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவ்விருது கண்ணதாசன் கழகத்தின் நிறுவனர் திரு.கிருஷ்ணகுமார் அவர்களால்நிறுவப்பட்டுள்ளது. 2019 ஆம்  ஆண்டுக்கான விருது எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதா, பின்னணிப் பாடகர் திரு. ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது 16.09.2019 அன்று கோவையில் இவ்விழா நிகழ்கிறது.  இதற்கு முன் கண்ணதாசன் விருதுகள் பெற்றோர் விபரம்: எழுத்தாளர்கள் திரு. அசோகமித்திரன், திரு.வண்ணதாசன், திரு.ஜெயமோகன், கவிஞர் சிற்பி, … Read more

தேவதைகளும் சாத்தான்களும்…

இலக்கியம் ஒன்றே மனித இனத்தை இன்றைய அழிவிலிருந்து மீட்டெடுக்கக் கூடியது.  நீங்கள் ஒரு இந்துவோ, முஸ்லீமோ, கிறித்தவரோ, பௌத்தரோ யாராக இருந்தாலும் உங்கள் கடவுள் உங்களை மீட்கப் போவதில்லை.  மனிதன் விதைத்ததை மனிதன் மட்டுமே அறுவடை செய்ய முடியும்.  முகமது ஷுக்ரி என்று ஒரு மொராக்கோ தேசத்து எழுத்தாளர் இருந்தார்.  அவர் எழுதிய அல்-கூப்ஸ் அல்-ஹஃபி என்று ஒரு அரபி நாவல் உள்ளது.  அரபி மொழி தெரிந்தவர்கள் அதை அரபியிலேயே படிக்கலாம்.  ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அதன் பெயர் … Read more