நானே ராஜா! நானே மந்திரி!

நாட்டின் பல தொகுதிகளில் வாக்காளர்களில் பலர் வாக்கு அளிப்பதில்லை.  வாக்கு அளிக்காதவர்களின் சதவிகிதம் சில தொகுதிகளில் 40 சதவிகிதம் கூடப் போய் விடுகிறது.  மக்களின் இந்த விரக்திக்குக் காரணம், எந்தக் கட்சியுமே மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்துவதில்லை என்பதுதான். தில்லியில் ஆயிரக்கணக்கான சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுபவர்கள் இருக்கிறார்கள்.  இவர்கள் பிகாரிகள்.  பீகாரில் தங்கள் மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு தனியாக தலைநகரில் ரிக்‌ஷா ஓட்டிப் பிழைக்கிறார்கள்.  பத்துக்குப் பத்து அறையில் மூன்று பேர் தங்குகிறார்கள்.  அறைக்கு … Read more

சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ் பெண்களை மையப்படுத்திய படம்.  ஆரண்ய காண்டத்தின் ஆரம்பக் காட்சிக்கும் சூப்பர் டீலக்ஸின் ஆரம்பக் காட்சிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. படுக்கையில் பெண்ணிடம் ஆண் தோல்வியுற்று அவளைச் சித்திரவதை செய்வது ஆரண்ய காண்டத்தில்.  சூப்பர் டீலக்ஸில் அதன் நாய (சமந்தா) தன் கணவன் (ஃபஹத் ஃபாஸில்) வெளியே சென்றிருக்கும் இரண்டு மணி நேரத்தில், தான் கல்லூரியில் காதலித்தவனை வீட்டுக்கு வரவழைத்து உறவு கொள்கிறாள்.  அந்த உறவில் அவன் தோல்வியுறுகிறான். என்னடா ஆச்சு என்கிறாள்.  டென்ஷன் என்கிறான்.  … Read more

ஆர்மோனியா ஸோமர்ஸ்

பிழை திருத்தம் பிழை திருத்தம் என்று நான் உயிரை விடுவது இதற்காகத்தான்.  ஆர்மோனியா ஸோமர்ஸ் என்னுடைய மூல நூலிலேயே ஆர்மீனியா ஸோமர்ஸ் என்று இருந்ததால் அதுவே அடுத்தடுத்த பதிப்பிலும் அப்படியே வந்து விட்டது.  சமயங்களில் நாம் சரியாக எழுதியிருந்தாலும் பத்திரிகைகளிலும் பதிப்பகங்களிலும் பணிபுரியும் அன்பர்கள் திருத்தம் செய்வார்கள்.  அது என்ன ஆர்மோனியா?  தப்பு.  ஆர்மீனியா தான் சரி.  இந்தப் பிழை பற்றி பல நண்பர்கள் விரிவாகக் கடிதம் எழுதியிருந்தார்கள்.  அனைவருக்கும் நன்றி.   இந்தப் புதிய பதிப்பில் திருத்தி … Read more

ஆர்மீனியா ஸோமர்ஸ்

2001-இல் எழுதிய “நான் எழுதுவது அறநூல் அல்ல” என்ற என் கட்டுரையில் உருகுவாயைச் சேர்ந்த Armenia Somers என்ற பெண் எழுத்தாளரின் The Fall என்ற சிறுகதை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்.  எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது என்ற நூலை தற்சமயம் பிழைதிருத்தம் செய்து கொண்டிருந்த போது அந்த நூலின் முதல் கட்டுரையாக இருக்கிறது இது.  The Fall கதை எனக்கு வரி வரியாக ஞாபகம் இருக்கிறது.  போலீஸால் தேடப்படும் ஒருவன் – அவன் திருடனா, போராளியா என்ற விபரம் … Read more

வீரமணியின் சமூக விரோதப் பேச்சு

இந்திய சமூகமும் அரசியலும் சமூக விரோதிகள் மற்றும் கிரிமினல்களின் கைகளுக்குப் போய் எத்தனையோ காலமாகி விட்டது.  கிருஷ்ணர் பற்றிய வீரமணியின் பேச்சு அதற்கு ஒரு உதாரணம்.  ஏற்கனவே இந்திய சமூகம் மதவெறியர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கிறது.  இந்து மற்றும் முஸ்லீம் தீவிரவாதிகள் சமூகத்தின் சமநிலையைக் குலைக்கத் துவங்கி விட்டனர்.  மோடி ஆட்சியில் இந்துத் தீவிரவாதம் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளோடு இந்துக் கடவுள் கிருஷ்ணரை சம்பந்தப்படுத்திப் பேசியிருக்கும் வீரமணியின் சமூக விரோத செயலை முதல்முதலில் … Read more