ஒரு பேரழகியின் உன்னத சங்கீதம்

இன்று காலை நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைப் பயிற்சி முடிந்து வீட்டுக்கு வந்ததும் சவூதி வாசகர் ராம ஸ்ரீனிவாசன் அனுப்பியிருந்த இந்த இணைப்பைப் பார்த்தேன்.  அற்புதமான குரல்.  அருமையான சங்கீதம்.  ஆனால் கண்களைத் திறந்தபடி கேட்டால் செவிகள் அந்த அருமையான சங்கீதத்தைக் கேட்க மறுக்கின்றன.  கண்களை மூடிக் கொண்டு தான் கேட்க வேண்டியிருக்கிறது.  இப்படிப்பட்ட பேரழகிகள் தான் இந்தப் பூவுலகை இன்னமும் ரசிக்கத்தக்கதாக மாற்றுகிறார்கள்.  இவருக்கு (சங்கீதத்துக்கு என்று பாட பேதம்) அடிமையாகி விட்டேன். https://www.youtube.com/watch?v=1hWAOReJehw

சில ஆலோசனைகள்

  நான் சந்திக்கும் நண்பர்கள் அனைவரும் மற்றும் வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஃபேஸ்புக்குக்கு அடிமையாகிக் கிடப்பதைப் பார்க்கிறேன்.  கேட்டால் அராத்து ஃபேஸ்புக்கிலேயே இருந்து புத்தகம் எழுதி விட வில்லையா என்று கேட்கிறார்கள்.  எப்போதுமே நிபுணர்களை உதாரணமாகக் கொள்ளாதீர்கள்.  சர்க்கஸில் கயிற்றில் நடக்கிறார்கள் என்றால் நீங்களும் கயிற்றில் நடப்பீர்களா?  மது அடிமை, கஞ்சா அடிமை போல் அல்லது அதைவிடவும் தன்னை உபயோகிப்பவர்களை அடிமைப் படுத்தும் குணம் உடையது ஃபேஸ்புக்.  நீங்கள் ஃபேஸ்புக்கிலேயே இருந்தால் எதையுமே படிக்க முடியாது.  உங்கள் … Read more