துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை

யாவரும் பதிப்பகம் வெளியீடாக பாலசுப்ரமணியன் பொன்ராஜின் ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ சிறுகதைத் தொகுப்பு பற்றி வரும் ஞாயிறு காலை 10:30 மணிக்கு, டிஸ்கவரி புக் பேலஸில், சாரு பேசுகிறார். நண்பர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறேன். – ஸ்ரீராம்

பழுப்பு நிறப் பக்கங்கள்: கு.ப.ரா. (பகுதி 1)

நான் கும்பகோணம் சென்றதில்லை. ஒருமுறை அங்கே சென்று அந்தப் பிள்ளையார் கோவில் தெருவை தரிசித்து வரலாம் போல் இருக்கிறது. அந்தத் தெருவில்தானே கு.ப.ரா.வும் பிச்சமூர்த்தியும் புழங்கியிருப்பார்கள். பிச்சமூர்த்தி கு.ப.ரா.வை விட இரண்டு வயது மூத்தவர். தி. ஜானகிராமனும் எம்.வி. வெங்கட்ராமும் அந்த இரட்டையரை விட பதினெட்டு பத்தொன்பது வயது இளையவர்கள். அடுத்த தலைமுறை. ஆனாலும் பழகியிருக்கிறார்கள். அவர்களும் அந்தப் பிள்ளையார் கோவில் தெருவில் நடந்திருப்பார்கள் மேலும் படிக்க: http://bit.ly/1VTscmr

மாரத்தானும் புத்தக விழாவும் – பிரபு காளிதாஸ் குறுங்கதை

நேற்று 11.6.16 மாலை புத்தக விழா பின்புறம் ஓடும் சாக்கடையைத் தாண்டி இருக்கும் பார்க்கிங்கில் ஒரு இரண்டாயிரம் கார்கள் மேல் நின்றது. டூவீலர்கள் கண்ணிலேயே சிக்கவில்லை. பொதுவாக மிடில் க்ளாஸ்தானே நிறைய வருவார்கள், பணக்காரர்களும் படிக்க ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டார்களோ என்று சந்தேகம் வந்ததற்குக் காரணம், அங்கே நின்ற கார்கள் எல்லாமே லக்ஸுரி மாடல்கள். ஒவ்வொரு காரிலும் விலை உயர்ந்த சைக்கிள்கள் இரண்டு மூன்றை, சினிமாவில் ராஜ்கிரண் தூக்கி அடிப்பார் அல்லவா? அதே ஸ்டைலில் காரின் பின்னால் … Read more

இறைவி – சாரு பேட்டி

இறைவி படம் பற்றி சாருவின் சிறு பேட்டி, நேற்று ஆஸ்திரேலியாவின் SBS தமிழ் ரேடியோவில் ஒலிபரப்பானது. நண்பர்கள் கேட்கவும். – ஸ்ரீராம் *** http://www.sbs.com.au/yourlanguage/api/radio/player/podcast/608996?node=488364

புத்தகம் பேசுது : பிரபு காளிதாஸ் நேர்காணல்

இத்தனை வயதில் (63) என் பெயரை பொதுவெளியில் ஒரே ஒருவர் தான் சொல்லியிருக்கிறார். அவர் ஷோபா சக்தி.  இன்னொரு தடவை மனுஷ்ய புத்திரன் தனக்குப் பிடித்த நூல்கள் என்று எக்ஸைலையும் சொல்லியிருந்தார்.  (அவருக்கு போதையே ஏறாதே?  என்னவோ தெரியவில்லை, சொல்லி விட்டார்.)  இது தவிர வேறு எந்த ஆத்மாவும் என் பெயரைச் சொன்னதேயில்லை.  இலக்கிய டெலிஃபோன் டைரக்டரியில் கூட சா என்று ஆரம்பிக்கும் பெயர்களில் சாவன்னா இருக்காது.  ஆனால் இப்போதெல்லாம் மூன்று வயதுக் குழந்தை விராத் கோலியின் … Read more