ஓநாய் குலச் சின்னம் – மதிப்புரை

மீள் பிரசுரம் அக்டோபர் 14, 2012 ஏசியன் ஏஜ் (கட்டுரையின் தமிழ் மூலம்) Jiang Rong எழுதிய Wolf Totem என்ற நாவல், மா சே துங்கின் ரெட் புக்கைப் போல் மில்லியன் கணக்கில் விற்றுக் கொண்டிருக்கிறது.  இந்த நாவலை இலக்கியம் என்று சொல்வதை விட ஆந்த்ரபாலஜி என்றே சொல்லுவேன்.  Oscar Lewis இன் La Vida என்ற ஆந்த்ரபாலஜி புத்தகத்தில் இருந்த அதே விறுவிறுப்பு இந்தப் புத்தகத்திலும் இருக்கிறது.  Puerto Ricoவின் San Juan நகரில் … Read more

பிரச்சினை

என் இளம் தோழி சொன்னாள் என் நண்பர்கள் பலர்  அவளுக்கு நட்பு விண்ணப்பம் அனுப்புவதாக அதில் என்ன தப்பு என்றேன் வேறு யாருமே எனக்கு நட்பு விண்ணப்பம்  அனுப்புவதில்லை என்றாள் ஏன் என்றேன் ஃபேஸ்புக்கில் நானொரு ஃபேக் ஐடி  மட்டுமல்லாமல் அங்கே  நீங்கள் ஒருவர்தானே என் நண்பர்  என்றாள்

எனது வாழ்வைக் கவிதையாய் மாற்றினாய்!

மீள் பிரசுரம் ஜூலை 31, 2004 இளம் பிராயத்தில் நான் வாசித்த ஒரு புத்தகமே என் வாழ்வின் போக்கை முழு முற்றாகத் திசை திருப்புவதற்கும் காரணமாக அமைந்தது. அந்தப் புத்தகம், சேகுவாரா எழுதிய பொலிவிய நாட்குறிப்புகள். அதன் பிறகு, லத்தீன் அமெரிக்கா சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் அதன் மீது தீராக் காதல்கொண்டு அதிலேயே என்னை ஆழ்த்திக்கொள்ள ஆரம்பித்தேன். லத்தீன் அமெரிக்க சினிமா, அரசியல், விடுதலை இறையியல், கால்பந்து, ஸல்ஸா, ஸான்டினிஸ்டா, மெரெங்கே என்று அந்தப் பட்டியல் வெகு … Read more

ஸ்பரிஸம்

நீ யார் உன் பேரென்ன ஊரென்ன தேசமென்ன நீ படித்திருக்கிறாயா எத்தனை படித்தாய் உனக்கு மணமாகி விட்டதா எத்தனை குழந்தைகள் பாய் ஃரெண்ட் உண்டா உனக்கு எது எதெல்லாம் பிடிக்காது உனக்கு எது எதெல்லாம் பிடிக்கும் இது எதுவுமே எனக்குத் தெரியாது அதேபோல் உனக்கும் என்னைத் தெரியாது நீயும் நானும் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் பிரியப்போகிறோம் அதற்குப் பிறகு காலவெளியில் நாம் சந்திக்கும் வாய்ப்பே இல்லை ஆனாலும் பெண்ணே உன் ஸ்பரிஸம் பேரின்பத்தின் உச்சம் … Read more

யோகப் பயிற்சி முகாம்

ஜெயமோகன் தளத்தில் இருந்து: நண்பர்களுக்கு வணக்கம். வரும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 (வெள்ளி, சனி, ஞாயிறு) நாட்களில் ஒரு யோகப்பயிற்சி முகாம் ஒருங்கிணைக்கப்படுகிறது. கட்டணம் உண்டு பங்கெடுக்க விரும்புபவர்கள் jeyamohan.writerpoet@gmail.com  என்னும் முகவரிக்கு எழுதலாம். பெயர், தொலைபேசி எண், ஊர், வயது, நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்கிறீர்களா? ஆகிய தகவல்களுடன் எழுதலாம் * யோகப்பயிற்சிகள் சார்ந்த எண்ணற்ற பள்ளிகள் இன்று உலகம் முழுவதும் இருந்தாலும், வெகு சில மரபார்ந்த கல்விநிலைகள் மட்டுமே, இந்த துறையில் நீண்ட ஆய்வுகளை … Read more