நான்தான் ஒளரங்கசீப் – அராத்து

“நான் ஒழுக்கமானவன் என்ற பலத்தின் அஹங்காரமே என் கண்களை மறைத்து விட்டது “- ஔரங்கசீப். சாரு எழுதி வரும் நான் தான் ஔரங்கசீப்பின் வெளிவராத ஒரு அத்தியாயத்தை வாசித்துக்கொண்டு இருந்தேன். இந்த வரியில் மனம் நின்று விட்டது. இந்த வரியை ஔரங்கசீப் சொல்லியிருப்பாரா , தெரியாது. ஔரங்கசீப் மூலம் சாரு நிவேதிதா சொல்கிறார். யோசித்துப் பார்த்தால் சாரு நிவேதிதாவின் ஒட்டு மொத்த எழுத்துக்களின் ஆதார ஸ்ருதியாக இந்த வரியை எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. தான் ஒழுக்கமாக இருப்பதாக … Read more

நான்தான் ஒளரங்கசீப் – மதுரை அருணாச்சலம்

எனக்கு மொபைல் திரையில் படிப்பதென்பது மிகவும் கடினமான காரியம்.. கணினித்திரையில் படிப்பதும் பிடிக்காது. பலமுறை முயன்றும் தோற்றிருக்கிறேன்.. இத்தனைக்கும் அது 21 இன்ச் மானிட்டர்.. அது சாருவின் புதிய நாவலான ” நான் தான் ஒளரங்கசீப் ” bynge app இல், பல அத்தியாயங்கள் வெளிவந்து பல நாட்கள் ஆகியும், வேறு வழியின்றி இன்று காலை மொபைலில் இருந்து செயலி மூலமாக முதல் பாகத்தை மட்டும் என்னுடைய மெயிலுக்கு அனுப்பி, கணினித்திரையில் வாசித்து அசந்தே விட்டேன். அடுத்தடுத்த … Read more

அவதூறுக்கு எதிர்வினை (19): வா.மு. கோமு

யாரு பதிவு போட்டா என்னான்ற காலத்துல இருந்து இவன் தான் போட்டான்னு உடனே தெரிஞ்சிக்கிற காலத்துல இருக்கோம்ல! ஆமா கோமு! சின்னப்பய அவன்.. வுடுங்கோ! இப்பவும் என் நட்புல பழகின நண்பரும் உங்களை எழுதிட்டே இருக்காப்டி.. ஏற்கனவே ஜெயமோகனையும் எழுதி ஓய்சிட்டாப்டி! புதுசா உங்களை பிடிச்சிட்டாப்டி! அடுத்த எழுத்தாளனை திட்டுறக்கெ நேரம் ஒதுக்கி இப்பிடி முக்கி முக்கி பதிவு போடுறாங்களே.. அவிக (இலக்கிய) எழுத்துக்கு நம்ம எழுத்துல ஒரு நேர்மை இருக்குன்னு புரிஞ்சிட்ட நாள் இன்னிக்கி தான்!

அவதூறுக்கு எதிர்வினை (18): ஜ்யோவ்ராம் சுந்தர்

You are a great writer, Charu! Not a word more, not a word less. ஏற்கனவே எழுதியிருக்கேன். எனக்குப் பல மேலை எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது சாருதான். லவ் யூ தல! கவன ஈர்ப்பிற்காகச் சில சில்வண்டுகள் துடிக்கவே செய்யும். ஆனால், உங்க சாதனை! மறுபடி, லவ் யூ சாரு! நீங்க என்னோட முக்கியமான ஆசிரியர். எப்போதும் என் மரியாதைக்குரியவர்.

அவதூறுக்கு எதிர்வினை (16): லக்ஷ்மி சரவணகுமார்

தன்னை அறிவாளி என்று நம்பிக்கொள்வது ஒருவிதமான மனநோய், இந்த மனநோய் முற்றத் துவங்கும்போதுதான் ஒருவன் மற்றவர்களை சிறுமைப்படுத்தத் துவங்குகிறான். இலக்கியம் யாருடைய அப்பன் வீட்டு சொத்துமல்ல, குடும்பத்திலும் தன்னைச் சார்ந்தவர்களிடமும் வெளிப்படுத்தும் அதிகார தொனியை விமர்சன அளவுகோலாக வைத்துக்கொண்டு மற்றவரை விமர்சிப்பது சாதிய அதிகாரத்தின் இன்னொரு வடிவம்தான். ஒருவரின் எழுத்தோடு முற்றாக உடன்படமாட்டேன் என்று சொல்ல எவருக்கும் உரிமையுண்டு, ஆனால் ஒருவரை திருடன் பிச்சைக்காரன் என்று சொல்வதெல்லாம் கடைந்தெடுத்த சாதிய மனோபாவத்தின் மனநோய். சாரு நிவேதிதாவைத்தானே அந்த … Read more