நிராகரிப்பும் தடையும் (7)

அ. ராமசாமியின் கருத்தை ஒட்டிய முகநூல் விவாதம். 17.02.20 மதுரை அருணாச்சலம்: ராமசாமி சார், ஏதோ அவருடைய படைப்புகளால் பயனடைந்த வாசகர்கள் மட்டுமே அவரை கொண்டாடுகிறோம். உடன் நிற்கிறோம். வெறும் விமர்சகனை விட, பயனடைந்த தேர்ந்த வாசகன் எவ்வளவோ மேல். வாசகன் நன்றியுடனும் இருப்பான் என்பது என் எண்ணம். உலகளாவிய பார்வை கொண்ட சாருவை இங்கே புரிந்து கொள்வதில், பலருக்கும் ஒவ்வாமை இருந்தது, இருக்கிறது என்பதே என்னுடைய எண்ணம். சாரு தமிழ்ச்சமூகத்தில் இருந்து விலகவில்லை. மற்ற எழுத்தாளர்கள் … Read more

நிராகரிப்பும் தடையும் (6)

அ. ராமசாமி 17.02.20 சாரு நிவேதிதாவின் பனுவல்கள் வளர்ச்சியடைந்த நடுத்தரவர்க்க மனநிலையோடு உரையாடல் செய்யும் பனுவல்கள். பெருமாள்முருகனின் பனுவல்கள் நடுத்தரவர்க்க மனநிலையே இன்னதென்றறியாத மனிதர்களின் உளப்பாங்கை நோக்கிப் பேசும் பனுவல்கள். இவ்விரண்டையும் இணையாக வைத்து விவாதிக்கும் புள்ளியைப் பனுவல்களுக்குள் கண்டறிவது இயலாத ஒன்று. அப்படிப் பேசும் ஒரு கட்டுரையை முக்கியமான கட்டுரை என்று சாரு நிவேதிதாவே முன்வைத்துப் பேச முன்வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சாரு நிவேதிதாவின் பனுவல்கள் நிராகரிக்கப்பட்டதற்கும் விவாதிக்கப்படாமல் போனதற்கும் அவரது புத்தகங்கள் சந்தைப்படுத்தப்பட்ட முறைகளும், … Read more

நிராகரிப்பும் தடையும் (5)

காயத்ரி ஆர். 17.02.20 சாரு நிவேதிதா குறித்த த. ராஜனின் கட்டுரை – பொதுவெளியில் சாரு பற்றி விவாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. அதனாலேயே அது முக்கியமான ஒன்றாகிறது. ஆனால் ராஜனின் அணுகுமுறையிலிருந்து நான் முரண்படுவது எங்கென்றால் – ஒருவகையில் எல்லா எழுத்தாளர்களுமே அவரவர்களின் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்திக் கொண்டவர்கள்தாம். வில்லியம் பர்ரோஸ், ஜேக் கெரோவாக், சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி போன்றவர்கள் அமெரிக்க சமூகத்திலிருந்தும் மிஷல் வெல்பெக் (Michelle Houllebecq) ஃப்ரெஞ்ச் சமூகத்திலிருந்தும் ஓர்ஹான் பாமுக் துருக்கிய சமூகத்திலிருந்தும் அந்நியமானவர்களே. … Read more

நிராகரிப்பும் தடையும் (4)

சாரு நிவேதிதா ஏன் பெருமாள் முருகன் ஆக வேண்டும்? ஆர். அபிலாஷ் 16.02.20 த. ராஜனின் “சாரு நிவேதிதாவால் ஏன் பெருமாள் முருகன் ஆக முடியவில்லை?” என்னும் கட்டுரையுடன் என்னால் முழுக்க உடன்பட முடியவில்லை. ஏன்? சொல்கிறேன். தன்னை ஏன் தமிழ் சமூகம் பொருட்படுத்தவில்லை என சாரு அடிக்கடி சாடுவதுண்டு – அதில் பொறாமையும் உண்டு, நியாயமான வருத்தமும் உண்டு. சாருவின் அழகே அவர் தன் பொறாமைகளையும் ஆசைகளையும் லட்சிய முகமூடிகளின் பின்னால் மறைப்பதில்லை என்பது. ஆனால் … Read more

நிராகரிப்பும் தடையும் (3)

நிர்மல் சி. ம்ரின்ஸோ 16.02.20 நாம் தனிநபர்களே என்கிற உண்மை தெரிந்தவர்களாலும் , சமூகக் குழுமங்களோடு உரையாடாமல் தவிர்ப்பதன் மூலம் சமூகக் குழுமங்களிடமிருந்து தப்பிக்க நினைக்கிறவர்களும் சாருவோடு அடையாளப்படுத்திக்கொள்ள சிறிய அளவு வாய்ப்பு உண்டு . சாரு தன்னைத் தானே விமர்சித்துக் கொள்வது, தன் வாழ்க்கை குறித்த விமர்சனங்களை எழுதுவது போன்றவற்றையும் மற்ற எழுத்தாளர்களோடு ஓப்பிட்டு பார்த்தும் கட்டுரையில் எழுதியிருக்கலாம்.

நிராகரிப்பும் தடையும் (2)

தமிழ் இந்து – மனுஷ்ய புத்திரன் – அடியேன் சாரு நிவேதிதா 16.02.20 என் எழுத்து பற்றிய த. ராஜனின் கட்டுரை ஒன்று தமிழ் இந்து நாளிதழில் இன்று வெளியாகி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அது மிக நல்ல ஒரு கட்டுரை.  தமிழ்ச் சமூகத்திலிருந்து அந்நியமாகி விட்ட ஒருவனை அந்த சமூகம் எப்படி எதிர்க்கும் அல்லது எதிர்கொள்ளும்?  எனவே சாருவின் மீதான இந்தப் புறக்கணிப்பு புரிந்து கொள்ளக் கூடியதுதான் என்பது ராஜன் கட்டுரையின் அடிச்சரடு.  அக்கருத்தோடு எனக்கு … Read more