நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்…

என்னைத் தெரியாதவர்கள், என்னை அறியாதவர்கள் என்னைத் திட்டினால் எனக்குக் கோபம் வருவதில்லை. உயர்ந்த இடத்தில் இருப்போர் அப்படித்தான் இருக்க வேண்டும். நன்னிலம் நடராசன், வண்ணை ஸ்டெல்லா, வெற்றி கொண்டான் போன்றவர்கள் எதிர்க் கட்சித் தலைவர்களை – குறிப்பாக ஜெயலலிதாவை – திட்டிப் பேசுவதைக் கேட்டு வளர்ந்தவன் நான். தீப்பொறி ஆறுமுகம் பேச்சை மட்டும் நேரில் கேட்டதில்லை. ஒரு பெண் அரசியல்வாதியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டு, இடையிலேயே வேறோர் விஷயத்துக்குத் தாவி பேசி விட்டு வந்து, ஒரு … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகம் – முன்பதிவுத் திட்டம்

நேற்றிலிருந்து ஸ்ரீராம் ஒரே குஷியாக இருக்கிறார். என்ன காரணம் என்றால், ’எங்கே உன் கடவுள்?’ என்று என்னுடைய கட்டுரைத் தொகுப்பு ஒன்று உள்ளது. சோ இருந்த போது துக்ளக் பத்திரிகையில் தொடராக வந்தது. கிழக்கு பதிப்பகம். அது கிண்டிலில் வந்துள்ளது. ஏதோ சலுகை விலைத் திட்டத்தில் இப்போது ஒன்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது. அதன் கிண்டில் விற்பனை இப்போது ஏதோ இந்தியாவின் டாப் புத்தகங்களையெல்லாம், cult புத்தகங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு முதல் இடத்தில் இருக்கிறதாம். இதை நீங்கள் … Read more

காயத்ரியின் பிறந்த நாளான இன்று…

காயத்ரியின் பிறந்த நாளான இன்று இந்தக் கட்டுரையை மீள்பிரசுரம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எட்டு ஆண்டுகளுக்கு முன் நான் மிகப் பெரிய உயரத்திலிருந்து விழுந்த போது அந்த அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்.  அல்லது, பைத்தியம் பிடித்திருக்கும்.  இந்த இரண்டும் நிகழாமல் என்னைக் காப்பாற்றியவர் காயத்ரி.  அதுவும் அப்போது அவர் என்னைச் சந்தித்து ஒரு வாரம்தான் இருக்கும்.  சே, நீ இப்படிப்பட்ட ஆளா என்று என்னை விட்டு அகன்று விடாமல் என்னை நம்பினார். நான் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – 3 முன்வெளியீட்டுத் திட்டம்

பழுப்பு நிறப் பக்கங்கள் தினமணி இணைய இதழில் தொடராக வந்து கொண்டிருந்த போது அது பற்றி எழுத்து காலத்து மூத்த கவிஞர் எஸ். வைதீஸ்வரன் அது பற்றி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  அதை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அன்புள்ள சாரு… இந்த வாரம் தினமணியில் பழுப்பு நிறப் பக்கங்கள் தொடரில் ‘கு.ப.ரா. 3’ படித்தேன். கு.ப.ரா.வைப் பற்றி இதுவரை கவனிக்கப்படாத அல்லது அலட்சியப்படுத்தப்பட்ட பல ஆழமான தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. வெறும் அதிர்ச்சிகளைத் தூண்டும் … Read more

ரெண்டாம் ஆட்டம் இலவசம்…

www.amazon.in/ebook/dp/B07DCZYRB3 26 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடந்த ஒரு நாடக விழாவில் நான் போட்ட ஒரு நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது கொதித்து எழுந்த பார்வையாளர்கள் நாடகத்தை இயக்கிய என்னையும் நடிகர்களையும் அடித்துத் துவைத்து விட்டனர். பார்வையாளர்கள் யாரும் லும்பன் அல்ல; அவர்கள் அனைவருமே நாடகத் துறையைச் சேர்ந்தவர்கள், பேராசிரியர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், ஆக முக்கியமாக கம்யூனிஸ்டுகள். அடி பலமாக விழுந்தது. தடுக்கப் போன கே.ஏ. குணசேகரனும் அடிபட்டார். வளாகத்தில்தானே அடிக்கக் கூடாது, வெளியே வா, அடிப்போம் … Read more