பூச்சி 86

நாளை காலை (இந்திய நேரம்) ஏழிலிருந்து எட்டு வரை காயத்ரியின் ஃப்ரெஞ்ச் வகுப்பு உள்ளது.  ஒரு மணி நேர வகுப்பு.  வாரத்தில் இரண்டு நாட்கள்.  ஆன்லைன் வகுப்பு என்பதால் நான் என்னுடைய தளத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை.  ஒவ்வொரு மாணவருக்கும் விசேஷ கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாள் காயத்ரி. மாலையிலும் ஏழிலிருந்து எட்டு வரை இன்னொரு வகுப்பு உள்ளது.  மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது என அறிகிறேன்.  விபரங்கள் தேவையெனில் எழுதிக் கேட்கலாம்.  gayathriram53@gmail.com 1980-ஆம் … Read more

பூச்சி 85

ஹெலன் சிஸூவின் ரீடர் பற்றி எழுதியிருந்தேன்.  அதற்கு என் நீண்ட கால நண்பரான அ. ராமசாமி முகநூலில் ஒரு கருத்தை எழுதியிருந்தார்.  அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ”பூச்சி-84ஐப் படித்ததும் ஏன் சாருவுக்கு அதேபோல் ஒரு ரீடர் – வாசிப்பு உதவிக்களஞ்சியம் இல்லை என்று தோன்றியது. ஒரு மொழியில் செயல்படும் எல்லாருடைய எல்லா எழுத்துகளையும் ஒருவர் வாசித்துவிட முடியாது. பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் குறைந்தது அவர்களது சிறப்புத் தேர்வுக்குரிய இலக்கியவகையினத்தை முழுமையாகவும் அவ்வகையினம் சார்ந்த மற்றவர்களின் சாராம்சத்தை … Read more

பூச்சி 84

ஹெலன் சிஸூ ரீடர் கிடைத்து விட்டது.   இனி நாடகத் தொகுப்பு மட்டும்தான் தேவை. சிஸூவின் புத்தகங்களின் விலை பற்றி யோசிக்கும்போது நான் எழுதியிருந்தது ஞாபகம் வந்தது.  ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்கள் அந்த நாட்டு அதிபரைப் போன்றவர்கள்.  விலையைப் பார்த்தால் ஒப்புக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.  சமீபத்தில் ஒரு பதிப்பக நண்பரிடம் ஏன் ஐரோப்பிய எழுத்தாளர் பலரும் – குறிப்பாக ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்கள் – தமிழில் மொழிபெயர்க்கப்படுவதில்லை என்று கேட்டேன்.  சாத்தியமே இல்லை என்றார்.  அவர்கள் கேட்கும் முன்பணத்தைக் கேட்டால் … Read more

பூச்சி 83

கடந்த இரண்டு தினங்களாக அரூ பத்திரிகைக்கான நேர்காணலுக்காக எழுதிக் கொண்டிருந்தேன்.  இரண்டு தினங்களும் வேறு எந்த வேலையும் பார்க்கவில்லை.  அதற்காகப் படிக்கவும் வேண்டியிருந்தது என்பதால் இரவு பகலாக அந்த வேலைதான்.  அநேகமாக என் நேர்காணல்களில் மிக முக்கியமானதாக இருக்கும்.  நேர்காணல் என்கிற போது 2014-ஆம் ஆண்டு நாட்டியக் கலைஞரும் எழுத்தாளருமான Tishani Doshi எடுத்த நீண்ட நேர்காணல்தான் ஞாபகம் வருகிறது.  அது என்னுடைய ஆங்கிலத் தளத்தில் Author’s Parole என்ற தலைப்பில் உள்ளது. (www.charunivedita.com)  அது ஆங்கில … Read more

பூச்சி 82

நேற்று அல்ஹலாஜின் கவிதைகளை ஆறு மணி நேரம் படித்து மூழ்கியதில் முக்கியமான விஷயத்தை விட்டு விட்டேன்.  பரமஹம்ஸா பற்றி நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்த போது – இல்லை, இல்லை, பரமஹம்ஸாவின் வாழ்க்கையில் நடந்ததைப் போலவே ஒரு விஷயம் என் வாழ்வில் அடிக்கடி, ஏன், தினமுமே, நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லி, காசும் கல்லும் ஒண்ணுதான் எனக்கு, மண்ணும் பொன்னும் ஒண்ணுதான் எனக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தபோது என் வாய்க்குள் ஒரு ஈ போய் விட்டது.  இப்படியெல்லாம் எதிர்பாராத … Read more