ஹா ஹா ஹா ஹா…

”ஹா ஹா ஹா ஹா …  பின்நவீனத்துவப் பேமானி… ஜெயமோகன் உங்களுக்கு வைத்திருக்கும் பெயர்” என்ற பெயரில் எனக்கு ஒரு மொட்டைக் கடுதாசி வந்தது.  அது பற்றிய என் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்… http://www.jeyamohan.in/?p=60704   முன்பெல்லாம் மொட்டைக் கடுதாசி எழுதி பிடிக்காதவர்களைத் ஆபாசமாகத் திட்டுவது போல் இப்போதெல்லாம் கண்ட பெயர்களிலும் மின்னஞ்சலில் ஆபாசக் கடிதம், வசைக் கடிதம்  எழுதுகிறார்கள்.   தினந்தோறும் என்னைத் திட்டி, என் மனைவியைத் திட்டி ஆபாசக் கடிதம் வருகிறது.  நான் அவற்றையெல்லாம் … Read more

அன்புள்ள லிங்குசாமி… (2)

அன்புள்ள லிங்குசாமி, கடிதத்தின் ஆரம்பத்தில் சொன்னது போல் நீங்கள் மரண மொக்கைப் படங்களை எடுப்பது பற்றி எனக்குக் கவலையே இல்லை.  அது உங்கள் பிரச்சினை; இது போன்ற மரண மொக்கைகளைப் பார்க்க வேண்டியுள்ள துரதிர்ஷ்டசாலிகளான தமிழர்களின் பிரச்சினை.  ஆனால் அஞ்சானைப் பார்த்ததிலிருந்து என் கண் துஞ்சவில்லை.  மன உளைச்சல் தாங்க முடியவில்லை.  ஏனென்றால், நம்முடைய மிகப் பெரிய தேசியப் பொக்கிஷமான, நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய கர்னாடக இசையை நீங்கள் கேவலப்படுத்தி இருக்கிறீர்கள்.  நாயகி – அதுதான் நம் … Read more

அன்புள்ள லிங்குசாமி…

அன்புள்ள லிங்குசாமி… நீங்கள் இயக்கிய அஞ்சானைப் பார்த்த லட்சக் கணக்கான துரதிர்ஷ்டசாலிகளில் அடியேனும் ஒருவன்.  என் பெயர் சாரு நிவேதிதா. ஒருமுறை  ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நீங்களும் நானும் அருகருகே அமர்ந்திருக்கிறோம்.  மற்றபடி உங்களிடம் என்னைப் பற்றிச் சொல்ல ஒரே ஒரு விஷயம் உண்டு.  நான் மற்ற எழுத்தாளர்களைப் போல் பொழுதுபோக்கு சினிமாக்களின் எதிரி அல்ல.  எனக்கு கஜினி, ரன், கில்லி போன்ற படங்கள் ரொம்பப் பிடிக்கும்.  ஏன், துப்பாக்கியைக் கூட ரசித்தே பார்த்தேன்.   ரன் … Read more

கேள்வி பதில் : அந்திமழை

  என்னைப் போலவே இருட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த என் அருமை பப்புச் செல்லத்தை ’உலகத்துக்கு’ அறிமுகப்படுத்திய அந்திமழை ஆசிரியருக்கு நன்றி. http://andhimazhai.com/news/view/charu-22-08-2014.html

அவமானம்

  எனக்கு ஒரு சிறிய சந்தேகம்.  அது பற்றி வாசகர் வட்டத்தில் கேட்டால் அடிக்க வருவார்கள்.  ஒருமுறை வாசகர் வட்ட சந்திப்பில் ஒரு கர்னாடக சங்கீதக் கலைஞரை அழைத்துச் சென்று பாடச் சொன்னேன்.  அதிலேயே கொலைவெறி ஆகி விட்டார்கள்.  அதனால்தான் உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ தெரிந்திருக்குமா என்று கேட்கலாம் என்று.  சமீபத்தில் அஞ்சான் பார்த்ததிலிருந்து மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்.  அதில் கர்னாடக சங்கீதத்தை மிகுந்த அவமரியாதை செய்திருக்கிறார்கள். மேற்கில் பீத்தோவனை இப்படி அவமானப்படுத்தி ஒரு … Read more