அவமானம்

 

எனக்கு ஒரு சிறிய சந்தேகம்.  அது பற்றி வாசகர் வட்டத்தில் கேட்டால் அடிக்க வருவார்கள்.  ஒருமுறை வாசகர் வட்ட சந்திப்பில் ஒரு கர்னாடக சங்கீதக் கலைஞரை அழைத்துச் சென்று பாடச் சொன்னேன்.  அதிலேயே கொலைவெறி ஆகி விட்டார்கள்.  அதனால்தான் உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ தெரிந்திருக்குமா என்று கேட்கலாம் என்று.  சமீபத்தில் அஞ்சான் பார்த்ததிலிருந்து மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்.  அதில் கர்னாடக சங்கீதத்தை மிகுந்த அவமரியாதை செய்திருக்கிறார்கள். மேற்கில் பீத்தோவனை இப்படி அவமானப்படுத்தி ஒரு படத்தில் ஒரு காட்சியை வைப்பார்களா?  ஆனால் அஞ்சான் படத்தில் கர்னாடக சங்கீதத்தை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி இருக்கிறார்கள்.  அதனால் கடந்த ஒரு வாரமாக மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளில் மூழ்கிக் கிடக்கிறேன்.  அப்படிக் கேட்டுக் கொண்டிருந்த போது இந்த அம்மாள் பாடுவதில் மிகவும் ஆழ்ந்து போக முடிந்தது.  ஆனால் அவர் பெயரை அந்த இணைப்பில் போடவில்லை.  இவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா அல்லது உங்கள் நண்பர்கள் யாருக்கேனும் தெரியுமா?   தயவுசெய்து என் அறியாமைக்காக மன்னிக்கவும்.

Comments are closed.