Quentin Tarantino

சாரு …  நேரம் இருக்கையில்  படித்துப் பாருங்கள். . . மிக வெளிப்படையான பேட்டி இது.  பல இடங்களில் உங்களால் ரிலேட் செய்துகொள்ள முடியும் என்று தோன்றுகிறது… ராஜேஷ் http://wiki.tarantino.info/index.php/Playboy_Interview_2003 சில உதாரணங்கள்: Question: Your mom raised you without your biological father. “Premiere” magazine trotted him out after you became famous. Was that unfair? QT: That really bothered me for a long time. It was one of … Read more

ஒரு முக்கிய அறிவிப்பு

தமிழ் ஸ்டுடியோஸ் அருண் பின்வரும் அறிவிப்பைத் தந்திருக்கிறார்.  நண்பர்கள் முகநூலிலேயே பஜனை பண்ணிக் கொண்டிருக்காமல் கீழ்க்காணும் நிகழ்ச்சிக்கு வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.  நானும் வருவேன். நண்பர்களே, உலகின் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குனர் ஆனந்த் பட்வர்தனுக்கு, 2014ஆம் ஆண்டுக்கான, தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கப்படவிருக்கிறது. இந்த நிகழ்வை நண்பர்கள் தங்களின் சொந்த நிகழ்வாக நினைத்து, சக நண்பர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஊடக நண்பர்கள் தங்கள் ஊடகங்களில் இந்த அழைப்பிதழை வெளியிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். … Read more

நண்பர்கள்…

மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்துகிறேன்.  நூறு முறை எழுதி விட்டேன்.  இது நூற்று ஒன்றாவது முறை.   முன்பெல்லாம் அலைபேசியை இரவில் ஆஃப் செய்யாமல் கீழே உள்ள என் அறையில் வைத்து விட்டு மாடிக்குச் சென்று உறங்குவது வழக்கம்.  பிறகு நடைப் பயிற்சிக்குப் போகும் போதுதான் இரவில் ஏதேனும் அழைப்பு வந்திருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம்.  (இப்போதெல்லாம் இரவு பத்து மணிக்கு அலைபேசியை ஆஃப் செய்து விடுகிறேன்.  அதன் பிறகு காலை ஆறு … Read more

ஜிகிர்தண்டா

ஜிகிர்தண்டா பார்த்தவுடனே எழுதியிருக்க வேண்டும்.  இரண்டு தினங்களுக்கு முன்பே கணேஷுடன் பார்த்து விட்டேன்.  இரவு பத்து மணி காட்சிக்குப் போய் பல ஆண்டுகள் ஆகி விட்டன.  எழுத நேரம் இல்லை.  ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்காக எழுதிக் கொண்டிருந்ததில் இரண்டு தினங்கள் ஆகி விட்டன.  தமிழ் என்றால் 2000 வார்த்தைகள் கொண்ட கட்டுரைக்கு எனக்கு 2 மணி நேரம் ஆகும்.  ஆங்கிலத்தில் இரண்டு தினங்கள் ஆகிறது. இன்னும் சிறிது நேரத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கிளம்புகிறேன்.   அதற்கு முன் ஜிகிர்தண்டா பற்றி … Read more

ஆனந்த் பட்வர்தன்

அன்புள்ள அருண், ஆனந்த் பட்வர்தனின் படங்கள் பற்றி நான் எதுவும் எழுத முடியாது என்பதற்கான காரணங்களை விளக்கி நேற்று உங்களுக்கு ஒரு பத்து பக்கங்களில் கடிதம் எழுதினேன்.  ஆனால் கடைசியில் இரவு ஒன்பது மணி அளவில் நைட் ஷோ ஜிகிர்தண்டா பார்க்கப் போகும் அவசரத்தில் அதுவரை தட்டச்சு செய்ததைப் பாதுக்காத்து வைக்காமல் கணினியை மூடி விட்டேன் போலிருக்கிறது.  அந்தப் பக்கங்களை இப்போது எங்கும் காணோம்.  ஆனாலும் நேற்று எழுதியதையெல்லாம் மீண்டும் ஒருமுறை சேர்த்து எழுத முயற்சி செய்கிறேன். … Read more