ஒரு முக்கிய அறிவிப்பு

தமிழ் ஸ்டுடியோஸ் அருண் பின்வரும் அறிவிப்பைத் தந்திருக்கிறார்.  நண்பர்கள் முகநூலிலேயே பஜனை பண்ணிக் கொண்டிருக்காமல் கீழ்க்காணும் நிகழ்ச்சிக்கு வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.  நானும் வருவேன்.

நண்பர்களே, உலகின் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குனர் ஆனந்த் பட்வர்தனுக்கு, 2014ஆம் ஆண்டுக்கான, தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கப்படவிருக்கிறது. இந்த நிகழ்வை நண்பர்கள் தங்களின் சொந்த நிகழ்வாக நினைத்து, சக நண்பர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஊடக நண்பர்கள் தங்கள் ஊடகங்களில் இந்த அழைப்பிதழை வெளியிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். வலையுலகம், முகநூல் நண்பர்கள், இந்த தகவலை தங்கள் வலைப்பதிவு, முகநூல் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இது உங்களின் நிகழ்வு. நல்ல சினிமாவை விரும்பும் ஒவ்வொருவரும், முன்னெடுக்க வேண்டிய நிகழ்வு. ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று, மாலை மறக்காமல் லெனின் விருது விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

——————————

—————————————————————————————

தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது 2014 – அழைப்பிதழ்
 
நாள்: 15-08-2014, வெள்ளிக்கிழமை, மாலை 5 மணிக்கு.
 
இடம்: RKV ஸ்டுடியோ, வடபழனி பேருந்து நிலையம் எதிரில், விஜயா மருத்துவமனை அருகில்.
 
சிறப்பு விருதினர்கள்.
 
1. புத்ததேப் தாஸ் குப்தா (மேற்கு வங்க திரைப்பட இயக்குனர்)
2. சஷி குமார் (சேர்மன், ஆசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம்)
3. அம்ஷன் குமார் (திரைப்பட இயக்குனர்)
4. இமையம் (எழுத்தாளர்)
5. அழகிய பெரியவன் (எழுத்தாளர்)

இவர்களுடன் தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருதை பெரும், ஆனந்த் பட்வர்தன்.
 
இவர்கள் மட்டுமின்றி, தமிழ் சினிமாவில் இருந்து பல்வேறு முக்கியமான திரைப்பட இயக்குனர்களும், எழுத்தாளர்களும் பங்கேற்கவிருக்கிறார்கள்.
 
நிகழ்வில் புத்தர் கலைக்குழுவின் பறை இசை நிகழ்த்தப்படவிருக்கிறது. அண்மையில் புதிய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் விருது பெற்ற மணிமாறன் குழுவினர் இந்த பறை இசை நிகழ்வை நிகழ்த்துகிறார்கள். நண்பர்கள் மிக சரியாக 5 மணிக்கு அரங்கத்திற்கு வந்துவிடுங்கள். நிகழ்ச்சி சரியாக 5 மணிக்கு ஆரம்பித்துவிடும்.
 
நிவேதனம் உணவகத்தினர் சார்பாக சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நண்பரும், பாடலாசிரியருமான குறிஞ்சி பிரபா இதனை தமிழ் ஸ்டுடியோவிற்காக ஸ்பான்சர் செய்கிறார். 
 
நிகழ்விற்கு நன்கொடை அளித்த நண்பர்கள் அனைவரின் பெயரையும் மேடையில் நிச்சயம் அறிவிக்கிறேன். ஆனால் சில நண்பர்கள் நன்கொடை கொடுத்துவிட்டு பெயரை சொல்லாமல் விட்டுவிட்டனர். எனவே தயவுசெய்து நன்கொடை கொடுத்த நண்பர்கள் தங்கள் பெயரை inbox இல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 
 
நண்பர்களே இது உங்கள் நிகழ்வு. உங்களால்தான் இது சாத்தியப்பட்டிருக்கிறது. உங்கள் ஒவ்வொருவரின் வருகையும் எனக்கு முக்கியமானது. கருத்து வேறுபாடுகள், கருத்து மோதல்கள் தாண்டி, இந்த நிகழ்விற்கு வருகை புரிந்து வெற்றியடைய செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 
 
முகனூலில் இந்த அழைப்பிதழை பகிர்ந்து (Share) உதவுமாறும் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் 15ஆம் தேதி மாலை 5 மணிக்கு RKV ஸ்டுடியோவிற்கு வந்துவிடுங்கள். உங்கள் ஒவ்வொருவரின் வருகையும் எனக்கு முக்கியமானது. சந்திப்போம்.
 
—————————————————————————–
Thamizh Studio Lenin Award 2014 – Recipient: Anand Patwardhan (Film Maker)
 
15-08-2014, Friday, Evening 5 Sharp.
 
RKV Studio, Red Carpet Hall, Vadapalani (Opposite to Vadapalani Bus Depot.), Chennai.
 
Chief Guests:
 
Buddhadeb Das Gupta (Bengali Film Director)
 
Key Note Address:
 
Sashi Kumar (Chairman, Asian College of Journalism)
 
 
Felicitations:
 
Amshan Kumar (Film Director)
Imayam (Writer)
Azhagiya Periyavan (Writer)
 
Acceptance Speech:
Anand Patwardhan

Vote of Thanks
 
Arun M. (Thamizh Studio)
 
All Are Welcome.
 
Contact: 9840698236

Comments are closed.