“பெரிய ரைட்டர்டா!”

சராசரிகளோடு பழகினால் பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்று அடிக்கடி எழுதுகிறேன் அல்லவா?  ஆனால் எழுத்தாளர்களோடு பழகினால் அதை விடப் பிரச்சினையாக இருக்கிறது.  நேற்று இரவு நீயா நானா ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன்.  என்னோடு கலந்து கொண்ட பிற எழுத்தாளர்கள் ஜி. குப்புசாமி, ஷாஜி.  குப்புசாமி மொழிபெயர்ப்பாளர்.  அவரது மொழிபெயர்ப்பின் சிறப்பைப் பற்றி நான் பலமுறை எழுதியிருக்கிறேன்.  எழுத்தாளர்களிடம் அவ்வளவாகக் காண முடியாத அன்பு உள்ளமும் மென்மை உணர்வும் கொண்டவர்.  இவரிடம் பேசும் போதெல்லாம் எனக்கு கோபி கிருஷ்ணனின் … Read more

எக்ஸைல் (திருத்தப்பட்டது)

ஒருவழியாக எக்ஸைல் பற்றிய விஷயங்கள் முடிவுக்கு வந்து விட்டன.  குழப்பங்களும், சந்தேகங்களும் தீர்ந்து விட்டன.  திருத்தங்கள் செய்து விரிவாக்கப்பட்ட எக்ஸைல் சுமாராக 1400 பக்கங்கள் வந்துள்ளன.  கடந்த வாரம் நூறு பக்கம் எழுதிச் சேர்த்தேன்.  இனிமேல் எதுவும் சேர்ப்பதாக இல்லை.  மொத்தம் 2,00,000 வார்த்தைகள் உள்ளன.  பழைய எக்ஸைல் 80,000 வார்த்தைகள்.  (தாஸ்தயேவ்ஸ்கியின் இடியட்டைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  அதில் சுமார் 3,50,000 வார்த்தைகள் உள்ளன; தருணின் ஆல்கெமி 2,70,000 வார்த்தைகள்).   இந்த நிலையில் ஏற்கனவே வெளிவந்த எக்ஸைல் … Read more

ஸ்ரீவில்லிப்புத்தூர் – நோங்காய் – அராத்து – ஃப்ரெஞ்ச் பெண்கள்

மூன்று மாதம் ஓய்வாக இருந்து படிக்கலாம், இசை கேட்கலாம் என்று நினைத்தேன்.  ஆனால் விதி வேறு திசையில் இழுத்துக் கொண்டு போகிறது.  சந்தானம் ஸ்ரீவில்லிப்புத்தூர் கதையைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்.  காலை ஏழிலிருந்து எட்டு.  எல்லாவற்றையும் மனதில் குறித்துக் கொண்டு வந்து எழுதும் போது பல நுணுக்கங்கள் தொலைந்து விடுகின்றன.  ஒரு voice recorder வாங்கலாம் என்று யோசிக்கிறேன்.  போகிற வேகத்தைப் பார்த்தால் ஆறே மாதத்தில் நாவல் முடிந்து விடும் என்று தோன்றுகிறது.  19-20-ஆம் நூற்றாண்டு ஸ்ரீவைஷ்ணவர்களின் … Read more

இம்சை அரசன்

காலையில் நாலரை மணிக்கு எழுந்து விடுவேன்.  உடனே தியானம்.  பிறகு இஞ்சியை நறுக்கி இஞ்சி சாறு.  கொஞ்ச நேரம் படிப்பேன்.  ஆறு மணிக்கு நாகேஸ்வர ராவ் பூங்கா.  ஒன்றரை மணி நேரம் நடை.  பத்து நிமிடம் பிராணாயாமம்.  சரியாக எட்டு மணிக்கு நானும் ராகவனும் மகாமுத்ராவில் காஃபி குடிப்போம்.  ஸ்ரீவில்லிப்புத்தூர் நாவலுக்கு இப்போது குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.  ஒன்பது மணிக்கு வீடு திரும்பியதும், உடனடியாக ஃப்ரீஸரில் இருக்கும் சுறா மீன் துண்டுகளை எடுத்து வெளியே வைத்து விடுவேன். … Read more