Myth of Sisyphus…

உப்புப் பெறாத சமாச்சாரம் என்பார்கள் அல்லவா?  அப்படிக் கூட இல்லை…  நம் உடம்பிலிருந்து உதிரும் முடி இருக்கிறதல்லவா, அதற்குக் கூட லாயக்கில்லாத சமாச்சாரம் என் அன்றாட வாழ்வை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. யாரோ ஒரு பெண் அதிரம்மியமான குரலில் உங்களுக்கு ஆக்ஸிஸ் வங்கி க்ரெடிட் கார்ட் வேணுமா என்றார்.  சரி என்றேன்.  கிடைத்தது.  அதை நான் பயன்படுத்தாமல் வைத்திருந்தேன்.  ஒருநாள் ஏதோ ஒரு விமான டிக்கட் எடுக்க பயன்படுத்தித் தொலைத்து விட்டேன்.  டெபிட் கார்டில்தான் எல்லா வேலையையும் செய்வேன்.  … Read more

சினிமாவும் இலக்கியமும்…

இடைவிடாமல் படிக்கவும், உலக சினிமாவைத் தேடிப் பார்க்கவும் என் நண்பர்களையெல்லாம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறேன்.  இரண்டு தினங்கள் முன்பு ராஜேஷை (கருந்தேள்) சந்தித்தேன்.  அராத்து, கணேஷ் அன்பு, மற்றொரு ராஜேஷ், முரளி ஆகிய நண்பர்களும்  வந்திருந்தனர்.  அதிகாலை மூன்று வரை ஓடியது பேச்சு.  ஷேக்ஸ்பியரைப் பற்றிப் பேசியது மட்டுமே ஞாபகம் இருக்கிறது.  மற்றது அனைத்தும் மறந்து விட்டது.  நாவலில் 1000 பக்கங்களைப் படித்து விட்டதாக அராத்து சொன்னார்.  பிறகு, படித்தது வரை தன் கருத்துக்களை அரை … Read more

குக்கூ

  கடந்த நாலைந்து தினங்களாக பூஜா என் வீட்டில் இருந்தாள். எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.  ஒருநாள் கடற்கரை, ஒருநாள் கோவில் என்று அவந்திகாவும் பூஜாவும் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.  ஸோரோ பூஜாவுக்கு ரொம்ப தோஸ்த் ஆகியிருந்தது.  இப்போது பூஜா போனதும் ஏதோ உயிரே பிரிந்து விட்டது போல் சோகமாகப் படுத்திருக்கிறது. வியாழக் கிழமை அன்று ஏதாவது சினிமாவுக்குப் போகலாம் என்று திட்டமிடப்பட்டது.  அவந்திகா சினிமாவுக்குப் போய் இரண்டு ஆண்டுகள் இருக்கும்.  அவளுக்கு சினிமா பிடிக்காது.  ஆனாலும் பூஜாவுக்காகப் போகலாம் … Read more

டாஸ்மாக் பற்றி…

இன்றைய தினமலரில் தேர்தல் களம் பகுதியில் டாஸ்மாக் பற்றிய என் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.  படித்துப் பாருங்கள்… இரண்டாவது விஷயம், அடுத்த பிரதமரின் பார்வைக்கு திர்லோக்புரி கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை அனுப்பி இருக்கிறேன். அதை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிடச் சொல்லி. காங்கிரஸை வீட்டுக்கு அனுப்ப என்னால் முடிந்த சிறிய காரியம்.

அற்புதத் தருணம்…

இத்தனை நாள் பட்ட கஷ்டம் முடிவுக்கு வந்து விட்டது.  எக்ஸைல் எடிட்டிங் முடிந்து விட்டது.  மொத்தம் 1300 பக்கங்கள்.  இப்படிப்பட்ட தருணத்தை குடித்துக் கொண்டாடுவதே என் வழக்கம்.  கைவசம் ரெமி மார்ட்டினும் ஒயினும் உள்ளது.  ஆனாலும் என் (வளர்ப்பு) மகள் பூஜா வீட்டுக்கு வருவதால் கொண்டாட்டத்தை ஒத்தி வைத்து விட்டேன்.  பூஜா பற்றி பத்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறேன்.  யாருக்கு ஞாபகம் இருக்கிறதோ!  இந்தக் கொண்டாட்டத்தை சனிக்கிழமைக்கு ஒத்தி வைத்து விட்டேன்.  ராஜேஷ் சென்னை வருகிறார்.  அராத்துவும் … Read more