வர்றியா… வர்றியா…

ஃபேஸ்புக்கில் என் பெயர் மறுபடியும் இழுக்கப்பட்டிருக்கிறது.  தமிழில் ஃபேஸ்புக்கில் 90 சதவிகிதம் கிரிமினல் மனம் கொண்டவர்களே அலைந்து கொண்டிருக்கிறார்கள்.  எனக்கு இவர்களோடெல்லாம் உரையாடிக் கொண்டிருப்பதில் விருப்பம் இல்லை; முக்கியமாக நேரமும் இல்லை. மனுஷ்ய புத்திரன் திரு மு. கருணாநிதியை அவரது பிறந்த நாள் அன்று வாழ்த்திப் பேசினார் என்ற விஷயம் இணையத்தில் படு சூடான விவாதமாக மாறியது பற்றி நண்பர்கள் மூலம் அறிந்தேன்.  எனக்கு இதைப் படிக்கவோ இதில் கலந்து கொள்ளவோ விருப்பம் இல்லை; நேரம் இல்லை. … Read more

துளி துளி…

11th வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கும் ஆதித்யா என்ற மாணவன் எனக்கு ஒரு வித்தியாசமான கடிதம் எழுதியிருந்தான்.  வழக்கம் போல் ஆங்கிலத்தில்தான்.  இரண்டு வரிகளே இருந்த அந்தக் கடிதத்தில் ஒரு பாடலின் லிங்க் இருந்தது.  இந்தப் பாடலை ஆதித்யாவின் வகுப்பு மாணவர்களே எழுதி, இசையமைத்து, பாடியும் இருக்கிறார்கள். பின்னணி இசையும் அவர்களே. பாடிய மாணவனின் பெயர் மட்டும் எழுதியிருக்கிறான். ராஜகோபால்.  கீ போர்ட் வாசித்திருக்கும் மாணவன், கிதாரிஸ்ட் பெயர் எல்லாம் இல்லை.  அந்த இரண்டு பேரும் கூட ராஜகோபாலைப் … Read more

சேர்வராயன் மலை

இன்று இரவு சேர்வராயன் மலைக்குக் கிளம்புகிறேன்.  சேர்வராயன் மலைக் கடவுளைப் பற்றி எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் எழுதியிருக்கிறேன்.  பாப்பாத்தி அம்மாள் என்ற பாத்திரம் ஞாபகம் இருக்கிறதா?  இருந்தால் சேர்வராயன் மலையும் ஞாபகம் இருக்கலாம்.  இதுவரை நான் போனதில்லை.  இதுதான் முதல்.  குகைக் கோவிலில் தர்ஸனம் முடித்த பிறகு ஏற்காட்டில் இரண்டு நாள் தங்கி இருப்பேன்.  வாசகர் வட்ட நண்பர்களை இந்த முறை ஏற்காட்டில் சந்திக்க இயலாது.  ஆனால் ஜூலை 12, 13 தேதிகளில் வாசகர் வட்ட … Read more

எக்ஸைல், ஸால்ஸா…

இன்று காலையிலிருந்து பல நண்பர்கள் போன் செய்து பத்து நாட்களாக சாரு ஆன்லைனில் ஒன்றும் எழுத்து இல்லையே என்று விசனத்துடன் கேட்டனர். இதோ இப்போது எழுதத் தொடங்கி விட்டேன். பத்து நாட்கள் ஒன்றும் இல்லாததற்குக் காரணங்கள் இரண்டு.  ஒன்று, எக்ஸைல் வேலை.  தமிழில் வெளிவந்த போது அதன் மொத்த வார்த்தைகள் 80,000 வார்த்தைகள் இருக்கலாம்.  இப்போது 1,50,000 வார்த்தைகள். கிட்டத்தட்ட இரண்டு மடங்கு.  இன்னும் 50,000 வார்த்தைகள் சேர்க்க விஷயம் இருக்கிறது.  ஆனால் மொழிபெயர்ப்பாளர்களின் வசதி கருதியும் … Read more