துளி துளி…

11th வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கும் ஆதித்யா என்ற மாணவன் எனக்கு ஒரு வித்தியாசமான கடிதம் எழுதியிருந்தான்.  வழக்கம் போல் ஆங்கிலத்தில்தான்.  இரண்டு வரிகளே இருந்த அந்தக் கடிதத்தில் ஒரு பாடலின் லிங்க் இருந்தது.  இந்தப் பாடலை ஆதித்யாவின் வகுப்பு மாணவர்களே எழுதி, இசையமைத்து, பாடியும் இருக்கிறார்கள். பின்னணி இசையும் அவர்களே. பாடிய மாணவனின் பெயர் மட்டும் எழுதியிருக்கிறான். ராஜகோபால்.  கீ போர்ட் வாசித்திருக்கும் மாணவன், கிதாரிஸ்ட் பெயர் எல்லாம் இல்லை.  அந்த இரண்டு பேரும் கூட ராஜகோபாலைப் போலவே கலக்கி இருக்கிறார்கள்.  Recording-இல் பர்ஃபெக்‌ஷன் இல்லை என்றெல்லாம் எழுதுவது அநியாயம்.  வெறும் பனிரண்டாம் வகுப்பு மாணவர்கள்.  அதுவும் இப்போதுதான் பனிரண்டாம் வகுப்பு சென்றிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஒரு துரதிர்ஷ்டம்.  பாட்டு என்றால் அது சினிமாப் பாட்டுதான்.  மற்ற பாடல்களைக் காது கொடுத்துக் கேட்க முடியாது.  இல்லாவிட்டால் பக்திப் பாடல்கள்.  ஆனால் மலேஷியாவில் (முன்பு இலங்கையில்) தமிழ்ப் பாடல்கள் சினிமாவை நம்பி இல்லை.  நான் அடிக்கடி லிங்க் கொடுக்கும் Reshmonu-வை நீங்கள் கேட்டிருக்கலாம்.  இந்தப் பையன்கள் ரேஷ்மோனு லெவலுக்குப் பாடி, இசைத்திருக்கிறார்கள்.  அதிலும் அந்த கீ போர்ட் பையன் படு அட்டகாசம்.

இந்த மாணவர்கள் நான் வசிக்கும் மயிலாப்பூரில் உள்ள P.S. Senior Secondary School மாணவர்கள் என்று அறியும் போது பெரும் ஆச்சரியமும் உவகையும் அடைகிறேன்.  இந்த மாணவர்களை நாளை தமிழகமே அறியப் போகிறது.   இறைவனின் கருணையும் அன்பும் இவர்கள் மீது பொழியட்டும்.  வாழ்த்துக்கள்.

 http://www.youtube.com/watch?v=OYxb0fQbLw4

 

Comments are closed.