கொரோனா நாட்கள் – 3

என்னைப் பொறுத்தவரை கொரோனாவினால் என் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை.  இரண்டே விஷயங்களைத்தான் இழக்கிறேன்.  காலையில் நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடக்க முடியாமல் போனது.  இப்போது வீட்டு மொட்டைமாடியிலேயே நடக்கிறேன்.  அடுத்து, வாரம் ஒருமுறை நண்பர்களை சந்திப்பேன்.  அது இல்லை.  மற்றபடி ஒரு துளிக்கூட என் வாழ்வில் மாற்றம் இல்லை.  ஆனாலும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் வசிக்கும் பத்து பூனைக்குட்டிகளைப் பற்றி மிகவும் கவலையாக இருக்கிறது.  பிரகாஷுக்கு போன் போட்டுக் கேட்பதற்குக் கூடத் தயக்கமாக இருக்கிறது.  போகவில்லை … Read more

வரமும் சாபமும்…

இந்தியத் தொன்மங்களில் வரம் – சாபம் பற்றின கதைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  விமோசனம் இல்லாத சாபமே இந்தியத் தொன்மத்தில் இல்லை. அதனால் எனக்குக் கிடைக்கும் சாபங்களை வரமாகவே எடுத்துக் கொள்ளும் இயல்பு பெற்றேன். பாருங்கள்.  இந்த 2020-ஆம் ஆண்டை நான் பயணங்களுக்காகவே ஒதுக்கி இருந்தேன்.  ஃபெப்ருவரி மத்தியில் கிளம்பி பெர்லின் போய், அங்கே வசிக்கும் நஃபீஸுடன் சேர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளை காரிலேயே சுற்றலாம் என்பது திட்டமாக இருந்தது.  மார்ச் முதல் வாரம் முடிய.  மூன்று வாரங்கள்.  … Read more