பூனைகளும் நானும்…

பூனை புராணம் போதுமே சார் என்றார் பத்திரிகை ஆசிரியர்.  வாசகர்களை ரொம்பவும் போட்டுத் தாளிக்கக் கூடாது அல்லவா, அவர் சொல்வதும் சரிதான் என்று ஏற்றுக் கொண்டேன். சாரு ஆன்லைனிலும் எழுத வேண்டாம் என்றார்கள் நண்பர்கள். ஏற்கவில்லை.  எழுத எழுத வந்து கொண்டே இருக்கிறதே, என்ன செய்ய? ஆனால் ஒரு உத்தரவாதம் கொடுக்க முடியும்.  எழுதியதையே திரும்ப எழுத மாட்டேன்.  எனவே பூனை விஷயம் பிடிக்காதவர்கள் கொஞ்ச நேரம் ஒதுங்கிக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். முன்கதையை மட்டும் … Read more

ஃபாஸிஸத்தின் முகங்கள்

ஹேராம் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. படம் வெளியான போது சாரு நிவேதிதா எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதி இது. 1947 பிரிவினையின்போது சாகேத் ராமின் மனைவி ராணி முகர்ஜியை முஸ்லீம்கள் கற்பழித்து, அவள் கழுத்தையும் அறுத்து, கொன்று போட்டுவிடுகிறார்கள். இந்தக் காட்சி மிகவும் விபரமாக, நுணுக்கமாக, ஆவேசமாக, பார்வையாளர்களை வெறி கொள்ளச் செய்யும்படி அணு அணுவாக விவரிக்கப்படுகிறது. கற்பழிக்கும் கும்பலைச் சேர்ந்த அல்தாஃப் என்ற இளைஞன் சாகேத் ராம் குடும்பத்திடம் கூலி வாங்கிப் பிழைத்தவன். … Read more

ப்ளாக் நம்பர் 27, திர்லோக்புரி

இன்றைய சூழலில் மீண்டும் வாசிக்க வேண்டிய சிறுகதை. இந்தக் கதை மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் என்ற என் சிறுகதையில் உள்ளது. அந்த நூல் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் கிடைக்கும். இன்று கண்ணில் பட்டது. இதை ஏற்கனவே படித்திருக்கிறேன் – எஙகே என்று ஞாபகம் இல்லை. ஒவ்வொருமுறை வாசிக்கும் போதும் ஏதோவொரு கனத்தை உள்ளுக்குள் உண்டாக்கிவிடும் கதை. அமல்ராஜ் ஃப்ரான்ஸிஸ்

வேறு வழியில்லை: விமலாதித்த மாமல்லன்

கவனம் முழுத்தொகுப்பு -31,881 வார்த்தைகள் A4ல் 230 பக்கங்கள். இருந்தும் விலை ஏன் ₹49 அதிகம் வைத்திருக்கலாமே கவனம் ஞானக்கூத்தன் நடத்திய இதழ். அதன் உரிமை அவர் மகனிடம் உள்ளது. அவர் தமக்குப் பணம் வேண்டாம். அப்பாவின் எழுத்து பரவலானால் போதும் என்று சொல்லிவிட்டார். அவரே வேண்டாம் என்கிற பணம் எனக்கு மட்டும் எதற்கு. இதுவரை நான் உதவிய ஒருவரிடமும் ஒரு பைசாகூட வாங்கியதில்லை. இதில் மட்டும் எதற்கு. எனவேதான். கிண்டிலின் மினிமம் விலையான ₹49ஐ வைத்தேன். … Read more

ஜெயமோகனும் நானும்…

ஜெயமோகனுக்காக எழுதிய கடிதத்தைப் பதிவு செய்து விட்டுப் பார்த்த போது ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. அமெரிக்காவில் வசிக்கும் ஒரு ஆள் – ஜெயமோகனின் கூடாரத்தில் இருந்தவர் – ஏதோ காரணத்தால் அவரைப் பகைத்துக் கொண்டு என் பக்கம் வந்து முழ நீளத்துக்கு ஜெயமோகனை அவமதித்து ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தைப் பிரசுரம் செய்து அந்த ஆளைக் கன்னாபின்னா என்று திட்டி ஒரு பெரிய கட்டுரை எழுதினேன். அதற்குப் பிறகு நடந்ததுதான் வேடிக்கை. இன்று … Read more

அன்புள்ள ஜெயமோகனுக்கு… (திருத்தி எழுதியது)

காலையில் நடைப் பயிற்சிக்குச் செல்லும் அவசரத்தில் சில விஷயங்கள் விடுபட்டு விட்டன. இப்போது ஆற அமர யோசித்து அதையும் சேர்த்திருக்கிறேன். அன்புள்ள ஜெயமோகனுக்கு, நான் உங்களை என் குடும்பத்தில் ஒருவனாக நினைக்கிறேன். எல்லா எழுத்தாளர்களையும்தான். அதிலும் உங்களை ரொம்ப விசேஷமாக. ஏன் என்று உங்களைப் பற்றி நான் அவ்வப்போது எழுதியிருப்பவற்றையும் பேசியிருப்பவற்றையும் நீங்கள் நினைவுகூரலாம். குறிப்பாக, ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியை ஒற்றை ஆளாகச் செய்து கொண்டிருக்கிறார் ஜெயமோகன் என்று எழுதியும் பேசியும் வருபவன். இன்னும் … Read more