நிராகரிப்பும் தடையும்: அ. ராமசாமியின் எதிர்வினையை முன்வைத்து…

சாரு நிவேதிதாவின் பனுவல்கள் வளர்ச்சியடைந்த நடுத்தரவர்க்க மனநிலையோடு உரையாடல் செய்யும் பனுவல்கள். பெருமாள் முருகனின் பனுவல்கள் நடுத்தரவர்க்க மனநிலையே இன்னதென்றறியாத மனிதர்களின் உளப்பாங்கை நோக்கிப் பேசும் பனுவல்கள். இவ்விரண்டையும் இணையாக வைத்து விவாதிக்கும் புள்ளியைப் பனுவல்களுக்குள் கண்டறிவது இயலாத ஒன்று. அப்படிப் பேசும் ஒரு கட்டுரையை முக்கியமான கட்டுரை என்று சாருநிவேதிதாவே முன்வைத்துப் பேச முன்வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சாரு நிவேதிதாவின் பனுவல்கள் நிராகரிக்கப்பட்டதற்கும் விவாதிக்கப்படாமல் போனதற்கும் அவரது புத்தகங்கள் சந்தைப்படுத்தப்பட்ட முறைகளும், விமர்சனங்களின் மீது அவர் … Read more