corona nightmares – 7

பொதுவாக நான் ஜென்ரல் நாலட்ஜில் வீக். அதில் கமல்ஹாசன் படு எக்ஸ்பெர்ட் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன இருந்தாலும் அய்யங்கார் மூளை. கேட்கவா வேண்டும். சரி, அதை விடுங்கள். ஆனால் இந்த கொரோனா வந்ததும் ஜென்ரல் நாலெட்ஜ் கொஞ்சம் கொஞ்சமாக இம்ப்ரூவ் ஆகி வருகிறது. பாருங்கள். நேற்று தெரிந்து கொண்ட விஷயம் என்னவென்றால், கொரோனா என்றால், மதம் மாதிரியாம். அதாவது, மதத்துக்கு உள்ளே தானே நீங்கள் கிறிஸ்துவரா, முஸ்லீமா, இந்துவா, யூதரா என்றெல்லாம் இருக்கிறது? அதேபோலவாம். கொரோனா என்பது … Read more

கொரோனா தினங்கள் – 6

21 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும். வெளியில் தலையே காட்ட முடியாது. இப்படி இருந்து பழக்கமும் இல்லை. சரி, என்ன படிக்கலாம்? ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், அடியேனது தளங்களில் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் நாங்கள் எழுதியது அனைத்தும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கின்றன.  ஜெயமோகனின் தளத்தைப் படிக்க – ஒரு நாளில் ஆறு மணி நேரம் என்று படித்தால் – மூன்று ஆண்டுகள் எடுக்கும்.  எஸ்.ரா.வுக்கும் அப்படியே.  நான் அவர்களை விட ரொம்பக் கம்மியாகத்தான் எழுதியிருப்பேன்.  ஆனால் என்னுடையதைப் … Read more

கொரோனா நாட்கள் – 5

இதுவரை யாரும் வீட்டிலேயே இருந்ததில்லை.  இப்போது வீட்டிலேயே இருக்க வைக்கப்பட்டிருப்பது அவர்களுக்குப் புதிதாகவும் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.  ஏற்கனவே இலக்கியம் படிக்காமல் ஸைக்கோக்களாக உலவி வந்து கொண்டிருந்த கூட்டம் இப்போது வீட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டால் என்ன ஆகும்?  இன்னும் 21 நாள் கழித்து வெளியே வரும் போது இந்தக் கூட்டம் இன்னும் மோசமான ஸைக்கோக்களாகவே வெளியே வரும்.  இதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஒரு நண்பர் பிரிட்டானியா பிஸ்கட்டில் எத்தனை ஓட்டை … Read more

கொரோனா நாட்கள் – 4

இதைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது.  கொரோனாவினால் என் அன்றாட வாழ்வில் எந்த மாற்றமுமே இல்லை.  நாகேஸ்வர ராவ் பார்க் நடையும் மொட்டை மாடி நடையாக மாறி விட்டது.  கையை ஹேண்ட் வாஷினால் கழுவுவது?  ம்ஹும்.  அதில் கூட மாற்றம் இல்லை.  நீங்கள் இப்போது ஒரு நாளில் எத்தனை முறை ஹேண்ட் வாஷ் மூலம் கழுவுகிறீர்களோ அத்தனை முறை கொரோனாவுக்கு முந்தின காலத்திலும் நான் கழுவிக் கொண்டிருந்தேன்.  வெளியில் செல்லும்போது ஹேண்ட் … Read more

கொரோனா நாட்கள் – 3

என்னைப் பொறுத்தவரை கொரோனாவினால் என் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை.  இரண்டே விஷயங்களைத்தான் இழக்கிறேன்.  காலையில் நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடக்க முடியாமல் போனது.  இப்போது வீட்டு மொட்டைமாடியிலேயே நடக்கிறேன்.  அடுத்து, வாரம் ஒருமுறை நண்பர்களை சந்திப்பேன்.  அது இல்லை.  மற்றபடி ஒரு துளிக்கூட என் வாழ்வில் மாற்றம் இல்லை.  ஆனாலும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் வசிக்கும் பத்து பூனைக்குட்டிகளைப் பற்றி மிகவும் கவலையாக இருக்கிறது.  பிரகாஷுக்கு போன் போட்டுக் கேட்பதற்குக் கூடத் தயக்கமாக இருக்கிறது.  போகவில்லை … Read more

வரமும் சாபமும்…

இந்தியத் தொன்மங்களில் வரம் – சாபம் பற்றின கதைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  விமோசனம் இல்லாத சாபமே இந்தியத் தொன்மத்தில் இல்லை. அதனால் எனக்குக் கிடைக்கும் சாபங்களை வரமாகவே எடுத்துக் கொள்ளும் இயல்பு பெற்றேன். பாருங்கள்.  இந்த 2020-ஆம் ஆண்டை நான் பயணங்களுக்காகவே ஒதுக்கி இருந்தேன்.  ஃபெப்ருவரி மத்தியில் கிளம்பி பெர்லின் போய், அங்கே வசிக்கும் நஃபீஸுடன் சேர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளை காரிலேயே சுற்றலாம் என்பது திட்டமாக இருந்தது.  மார்ச் முதல் வாரம் முடிய.  மூன்று வாரங்கள்.  … Read more