கொரோனா சிந்தனைகள் – 2

அஞ்சு மணிக்கு நாமெல்லாம் கை தட்டணும் என்று மோடி சொன்னாரோ?  அதனால் கை பலரும் கை தட்டியிருப்பார்கள்.  நான் தட்டவில்லை.  ஏனென்றால், இந்தியா பைத்தியக்காரர்களின் கூடாரமாக விளங்குகிறது.  வெளியே வராதீர்கள் என்று சொல்லியும் ஒரு நிமிடத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் வீதம் போகின்றன.  செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரம் பயணிகள் ரயில்கள் ரத்தானதால் தங்க இடமின்றி தங்கியிருக்கிறார்கள்.  அவர்களுக்கு ஒரு சேவை நிறுவனம் உணவு வழங்குகிறது.  இதெல்லாம் மூளை இருப்பவர்கள் செய்கின்ற காரியம்தானா?  ஒருத்தருக்கு ஒருத்தர் நாலஞ்சு … Read more

கொரோனா சிந்தனைகள் – 1

இத்தனை தினங்களாக பெரும் கவலையில் இருந்தேன். நாகேஸ்வர ராவ் பூங்கா மூடப்பட்டு விட்டதால் அங்கே வசித்த பத்து பூனைகளும் எப்படி சாப்பிடும் என்பதே கவலை. அவைகளுக்கு வேட்டையாடத் தெரியாது என்பதால் பட்டினி கிடக்க வேண்டியதுதான். பார்க்கோ ஒரு மாதம் பூட்டிக் கிடக்கும். ஒரு மாதம் பட்டினி என்றால் சாவுதான். இங்கே உள்ளவர்களோ பிராமணர்கள். அவர்கள் அந்தப் பூனைகளுக்கு காலையும் மாலையும் உணவு கொடுப்பவர்கள். பிராமணர்கள் பொதுவாக சட்டத்தை மீறும் பழக்கம் இல்லாதவர்கள். ரௌத்திரம் பழகாதவர்கள். செக்யூரிட்டியோ இப்போதுதான் … Read more