ஊரின் மிக அழகான பெண் (தொடர்ச்சி)

பத்தோரி சீமாட்டி இளம் பெண்களின் ரத்தத்தில் குளிப்பாள் என்றேன்.  வெறும் இளம் பெண்கள் அல்ல; அவர்கள் கன்னிப் பெண்களாக இருக்க வேண்டும்.  ஒரு கட்டத்தில் பத்தோரிக்கு இந்த ரத்தச் சடங்குகளெல்லாம் வீண் என்று தோன்றியது.  காரணம், அவளுக்கு ஐம்பது வயது ஆன போது தோலில் சுருக்கங்கள் விழ ஆரம்பித்தன.  சரி, சூன்யக்காரியை வதை செய்து கொன்று விடலாம் என்று முடிவு செய்தாள்.  ஆனால் சூன்யக்காரி பத்தோரி சீமாட்டியிடமிருந்து தப்பிக்கவும், சீமாட்டியையே சிக்கலில் மாட்டி வைக்கவும் ஒரு சதி … Read more